பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குங்குலியக் கலய நாயனார் புராணம் 33翼

விரைந்து தொடர் வாள்.' (விராதன் வதைப் படலம், 40), 'மின்னைப் போல் இடையாளோடும் மேவுமெய்யுடைய னல்லன். (சூர்ப்பனகைப் படலம், 62), மின்னிடைச் சனகியை.' (கலன் காண் படலம், 18), மின்னிடைச் செவ்வாய்க் குவிமுலை. ' (நிந்தனைப் படலம், 122) என்று கம்பர் பாடியவற்றையும், மின்னினிடை தன்கருத்தறிந்து.", 'மின்னேரிடையாள் தன்வயிற்றில் விளங்கும் புகழ்வீடணன் பிறந்தான்.', மின்னிடையாள் சரபை.' (இராவணன் பிறப்புப் படலம், 10, 16, 65), மின்னிடையினார் தம்மை வெல்ல வரிந்து. (திக்குவிசயப் படலம், 172), மின்னார் மருங்குல்திரு.’ (அனுமப் படலம்,44), மின்னேரில்லாத இடை மெல்லியலையும்.” (சீதை வனம்பு குபடலம், 71), 'மின்னிடை மடவாய்.', மின்னிடையாளைக் கண்டு மெய்யுருகி.' (இலவணன் வதைப் படலம், 21, 23), 'மின்னியல் நுண்ணிடை மதிலைவல்லி.'(அசுவமேத யாகப் படலம், 134) என்று உத்தரகாண்டத்தில் வருவனவற் றையும் காண்க.

பிறகு வரும் 21-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'செந்தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் நல்ல திருமகளைக் காட்டிலும் மிக்க அழகைப் பெற்றவரும், குங் குலியக் கலய நாயனாருடைய பத்தினியாரும் ஆகிய பெண் மணியார் உண்பதற்கு உரிய பாத்திரமாகிய நுனி வாழை இலையை அறுத்துக் கொண்டு வந்து விரைவாகத் தம் முடைய கணவராகிய குங்குவியக் கலய நாயனாரை தமது நெற்றியில் ஒற்றைக் கண்ணைப் பெற்றவராகிய அமிர்த கடேசுவரருடைய பக்தரோடும் விதித்த முறைப்படி திருவிளக்கைத் தம்முடைய கையில் ஏந்திக்கொண்டு வந்து பொருந்தியிருக்கும் , இனிய ஆறுசுவைகளைக் கொண்ட உணவை உண்ணுமாறு பரிமாற, அந்த உணவை உண்டு பொருள் தெரிவதற்கு அருமையாக உள்ள இருக்கு வேதம், யஜுர் வேதம் சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக அத்தியாயம் செய்து