பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 பெரிய புராண விளக்கம்-4

"கண்பொலி நெற்றியினான் திகழ் கையிலோர்

வெண்மழுவான் பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை

மால்விடையான் விண்பொலி மாமதிசேர் தரு செஞ்சடை வேதியனூர் தண்பொழில் சூழ்பனந்த்ாள் திருத் தாடகை

- யிச்சரமே."

இந்த வரலாற்றை ஒரு புலவர் பின்வரும் வெண்பாவில். அமைத்துப் பாடியுள்ளார்.

" தாடகைதன் அன்புகண்டு தாமே தலை வளைந்தார்:

நாடுகல யர்க்கா நனி நிமிர்ந்தார்;-நீடிப் பயிலறிவோ ரன்றியார் பண்பறிவார் நீளத் தியுரியார் செய்த செயல் .”

அடுத்து வரும் 24-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அவ்வாறு சோழவேந்தன் வருந்திய வருத்தத்தைக் கேள்வியுற்று குற்றம் அற்ற புகழினால் மிக்க சிறப்பைப் பெற்றவரும், நல்ல வழியில் ஒழு கு ப வ ரு ம் ஆ கி ய குங்குலியக் கலய நாயனார் தலைவனாகிய அருணஜடேசு, வரனை நேராகத் தரிசிக்கும் அந்த வழியில் தலை சிறந்து நின்றான் என்று தெரிந்து அந்தச் சோழ மன்னனிடம் விருப் பத்தை அடைந்து தாமும் மின்னல் வீசினாற் போன்ற சடாபாரத்தைத் தன்னுடைய தலையின் மேற்பெற்ற விகிர் தனாகிய செஞ்சடையப்பனைப் பணியும் பொருட்டுத் திருப்பனந்தாளுக்கு எழுந்தருளினார். பாடல் வருமாறு: மன்னவன் வருத்தம் கேட்டு மாசறு புகழின் மிக்க நன்னெறிக் கலய னார்தாம் காதனை நேரே காணும் அந்நெறி தலைகின்றான்என் றரசனை விரும்பித்

- தாமும், மின்னெறித் தனைய வேணி விதிர்தனை வணங்க

வந்தார் . .