பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்தனிக் கலய நாயனார் புராணம் 341

மன்னவன். அவ்வாறு சோழவேந்தன். வருத்தம்வருந்திய வருத்தத்தை. கேட்டு-கேள்வியுற்று. மாசு-ஒரு குற்றமும். அறு-அற்ற, புகழின்-புகழினால். மிக்கமிக்க சிறப்பைப் பெற்றவரும்; வினையாலணையும் பெயர். நல்-ந்ல்ல, நெறி-வழியில் ஒழுகுபவரும்; திணை மயக்கம். க் சந்தி. கலயனார்-ஆகிய குங்குலியக் கலய நாயனார். தாம்’ என்றது அந்த நாயனாரை. நாதனை-தம்முடைய தலைவ னாகிய அருணஜடேசுவரனை. நேர்-நேராக. ஏ. அசை நிலை. காணும்-தரிசிக்கும். அந்நெறி-அந்த வழியில். தலை நின்றான்-தலை சிறந்து நின்றான். என்று-என்று அறிந்து. அரசனை-அந்தச் சோழ மன்னனிடம்: உருபு மயக்கம். விரும்பி-விருப்பத்தை அடைந்து. த், சந்தி, தாமும் என்றது குங்குலியக் கலய நாயனாரை, மின்-மின்னல். எறித்தனையஒளியை வீசினாற் போன்ற எறிந்தாலனைய என்பது 'எறித்தனைய' என நின்றது; தொகுத்தல் விகாரம். வேணிசடாபாரத்தைத் தன்னுடைய த லை யி ன் மேற்பெற்ற: விகிர்தனை-வேறு வேறு உருவங்களைப் பெற்றவனாகிய செஞ்சடையப்பனை. வணங்க-பணியும் .ெ பா ரு ட் டு. வந்தார்-திருப்பனந்தாளுக்கு எழுந்தருளினார். . .

பின்பு உள்ள 25-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

“மழு என்னும் ஆயுதத்தை ஏந்திய செந்தாமரை மலன்ரப் போலச் சிவந்த திருக்கரத்தைப் பெற்றவராகிய சிவபெருமானார் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களின் பக்கங்களுக்கு எழுந்தருளிக் குங்குலியக் கலய நாயனார் அந்தத் திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ள சிவபெரு மான்களை வணங்கி விட்டு மீ ண் டு வந்து பக்தியோடும் பழைய வேதநெறி தவறாத வண்ணம் உலகம் முழுவதையும் பாதுகாப்பதற்காக ஆகவனியம், காருகபத்தியம், தாட்சி ணாக்கினி என்னும் மூன்று நெருப்புக்களையும் பாது காப்பவர்களாகிய அந்தணர்கள் தங்களுடைய வாழ்க்கையை தடத்தும் செழுமையான மலர்கள் மலர்ந்த பலவகை மரங்கள்