பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 . . . . பெரிய புராண விளக்கம்-4

வளர்ந்து நிற்கும் பூம்பொழில் எல்லையாக அமைந்த திருப் பனந்தாளை அடைந்தார். பாடல் வருமாறு:

மழுவுடைச் செய்ய கையர் கோயில்கள் மருங்கு

சென்று தொழுதுபோங் தன்பி னோடும் தொல்மறை

- - நெறிவ ழாமை முழுதுல கினையும் போற்ற மூன்றெரி புரப்போர் . - வாழும் செழுமலர்ச் சோலை வேலித் திருபனங் தாளிற்

- சேர்ந்தார். '

மழு-மழு என்னும் ஆயுதத்தை. உடை-ஏந்திய, ச் சந்தி செய்ய-செந்தாமரை மலரைப் போலச் சிவந்த கையர்-திருக கரத்தைப் பெற்றவராகிய சிவபெருமானார். கோயில்கள்எழுந்தருளியிருக்கும் ஆலயங்களினுடைய. மருங்கு-பக்கங் 'களுக்கு ஒருமை பன்மை மயக்கம். சென்று-எழுந்தருளி. தொழுது-குங்குலியக் கலய நாயனார் அந்தத் திருக்கோயில் களில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்களை வணங்கிவிட்டு. போந்து-மீண்டு வந்து. அன்பினோடும்பட க் தி யோ டு ம். தொல்-பழைய. மறைநெறி-வேதநெறி; 'வேதநெறி தழைத் தோங்க' என்று பெரிய புராணத்தில் வருவதைக் காண்க. வழாமை-தவறாத வண்ணம். முழுது உலகினையும்-உலகம் முழுவதிலும் வாழும் மக்களையும்; இட ஆகுபெயர். போற்ற-பாதுகாப்பதற்காக. மூன்று எரி-ஆகவனியம், காருகபத்தியம், தாட்சிணாக்கினி என்னும் மூன்று நெருப்புக்களையும். எரி: ஒரும்ை பன்மை மயக்கம். புரப் போர்-பாதுகாப்பவர்களாகிய அந்தணர்கள்; ஒருமை பன்மை மயக்கம். வாழும்-தங்களுடைய வாழ்க்கையை நடத்தும். செழு-செழுமையான. மலர்-மலர்கள் மலர்ந்த பலவகை மரங்கள் வளர்ந்து நிற்கும்; ஒருமை பன்மை, மயக்கம். அந்த மரங்களாவன: வாகை மரம், வேங்கை மரம், தேக்க மரம், கடப்ப மரம், மருத மரம், வேப்ப மரம், புளிய மரம், வில்வ மரம், விளா மரம், கொறுக்கைச்சி மரம்,