பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 - பெரிய புராண விளக்கம்-4

வீழ்ந்து- விழுந்து. இளைப்பதுவும்- களைப்பை அடை வதையும். நோக்கி-பார்த்து. மா-பெரிய. தவ-தவத்தைப் புரிந்த. க்:சந்தி. கலயர் தாமும்-குங்குலியக் கலய நாயனாரும். தாம்: அசை நிலை. மனத்தினில் தம்முடைய திருவுள்ளத்தில். வருத்தம்-வருத்தத்தை. எய்தி-அடைந்து. - அடுத்து வரும் 27-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு :

'அந்தப் படை வீரர்களும் ஆண் யானைகளைக் கட்டிய தொகுதியும் களைத்துப் போய்த் தரையில் வி ழு ந் து தரையிலிருந்து எழாமல் இருந்த தன்மையைக் குங்குலியக் கலய நாயனார் பார்த்து, ‘அடியேனும் இந்தக் களைப்பை அடைந்து செயலற்றுப் போகும் இந்த நிலையை அடைய வேண்டும்” என எண்ணி தேன் மலர்ந்த கொன்றை மலர் மாலையை அணிந்த அருணஜடேசுவரருடைய திருமேனியில் பூத்தொழில் அமைந்த ஆடையோடு பொருந்திய பெரிய வன்மையான கயிற்றைத் தம்முடைய கழுத்தில் கட்டிக் கொண்டு இழுத்து வரு த் த த் தை அடையலானார்.' பாடல் வருமாறு :

சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த் தெழாமை - நோக்கி யானும் இவ் விளைப்புற் றெய்க்கும் இதுபெற

. வேண்டும்" என்று தேனலர் கொன்றை யார்தம் திருமேனிப் பூங்கச்

  • , -- - சேய்ந்த மானவன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்த

லுற்றார்.'

சேனையும்-சோழ மன்னனுடைய அந்தப் ப ைட வீரர்களும்; திணை மயக்கம். ஆனை.ஆண் யானைகளை, 'ஒருமை பன்மை மயக்கம். பூண்ட-கட்டிய திரளும்-கூட்ட மும், எய்த்து-களைப்பை அடைந்து த ரை யி ல் விழுந்து. எழாமை-தரையிலிருந்து எழாமல் இரு ந் த தன்மையை. நோக்கி-குங்குலியக் கலய நாயனார் பார்த்து, யானும்.