பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பெரிய புராண விளக்கம்-4

வீரர்கள்: ஒருமை பன்மை மயக்கம். பின் ஆக-தமக்குப் பின்னால் வர. த், சந்தி. தாம் என்றது ஏனாதி நாத நாய னாரை. முன்பு-அவர்களுக்கு முன்னால். தெம்-பகைவர்கள் உள்ள முனையில்-போர்க்களத்தில், ஏனாதி நாதர்-ஏனாதி நாத நாயனார். செயிர்த்து எழுந்தார் - சினம் மூண்டு எழுந்தார். -

அடுத்து வரும் 26-ஆம் பாடலின் கருத்து வருமாறு : கொடிய கோபம் கொண்ட வீரர்கள் ஏந்திய வாளா யுதங்கள் நெருப்பைக் கக்க, வீரத்துக்கு அடையாளமாக வீரர்கள் தங்களுடைய கால்களில் பூண்ட வெற்றிக் கழல் கள் முழங்க, ஆலகாலவிடத்தை அணிந்த திருக்கழுத்தைப் பெற்றவராகிய சிவபெருமானாருக்குப் பக்தராகிய ஏனாதி நாத நாயனார் தாம் பகைவர்களை எதிர்த்துப் டோர் புரிந்த போர்க்களத்தில் இறந்து போகாமல் மிஞ்சித் தமக்கு எதிரில் நின்று கொண்டிருந்த பகைவர்கள் போரிடும். போர்க்களத்தில் வேலாயுதங்களையே ஏ ர் க ள க் கொண்டு போரிடுதலாகிய உழவைப் புரியும் வீரர் களி னுடைய தலைகளையும், தோள்களினுடைய வலிமையை யும், கால்களினுடைய வலிமையையும் தாம் வெட்டிம் போக்கின்ார். பாடல் வருமாறு : - வெஞ்சினவாள் தீஉமிழ வீரக் கழல்கலிப்பு

கஞ்சணிகண் டர்க்கன்பர் தாம் எதிர்ந்த காட்பின்கண் எஞ்சிஎதிர் கின்ற இகல்முனையில் வேலுழவர் தஞ்சிரமும் தோளுரமும் தாளுரமும் தாம்.துணித்தார்."

வெம்-கொடிய சின-கோபம் மூண்ட வீரர்கள் ஏந்திய, வாள்-வாளாயுதங்கள்: ஒருமை பன்மை மயக்கம். தி. நெருப்பை, உமிழ-கக்க. வீர் - வீரத்தைக் காட்டும் அடை யாளமாகிய, க் சந்தி. கழல் - வீரர்கள் தங்களுடைய கால் களில் பூண்ட வெற்றிக் கழல்கள்; ஒருமை பன்மை மயக்கம். கலிப்ப-முழங்க. நஞ்சு-ஆலகாலவிடத்தை. அனி-அணிந்த. கண்டர்க்கு-திருக்கழுத்தைப் பெற்ற சிவபெருமானாருக்கு.