பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-350 பெரிய புராண விளக்கம்-4

கடைக்குறை. அன்பர்- பக்தராகிய குங்குவியக் கலய நாயனார். மன்றிடை-சிதம்பரம் ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில். ஆடல்-திருநடனத்தை செய்யும்புரிந்தருளும். மலர்க்கழல்-வெற்றிக்கழலைப் பூண்ட செந் தாமரை மலர்களைப் போன்ற திருவடிகளை ஆகுபெயர். மலர்: ஒருமை பன்மை மயக்கம். வாழ்த்தி-வாழ்த்திக் கொண்டு. வைகி-அந்தச் சிதம்பரத்தில் தங்கியிருந்து. - பிறகு உள்ள 32-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

சில தினங்கள் போனபிறகு திருக்கடவூரை அடைந்து குங்குலியக் கலய நாயனார் நிலைபெற்ற தம்முடைய திருப் பணிகளைச் செய்து கொண்டு அந்தத் தலத்தில் தங்கியிருந்து வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் தமக்கு ஒப்பு வேறு யாரும் இல்லாதவரும், சீர்காழியில் திருவவதாரம் செய் தருளிய தலைவராகும் திருஞான சம்பந்தப் பிள்ளை யாரும், தாண்டகச்சதுரராக விளங்கும் மலர்ந்த புகழைப் பெற்ற திருநாவுக்கரசு நாயனாரும் சேர அந்தத் திருக் கடவூருக்கு எழுந்தருளி வந்ததைப் பார்த்து. பாடல்

வருமாறு: -

சிலபகல் கழிந்த பின்பு திருக்கட ஆரில் கண்ணி நிலவுதம் பணியில் தங்கி கிகழும்நாள் கிகளில் காழித் தலைவராம் பிள்ளை யாரும் தாண்டகச் சதுர ராகும் அலர்புகழ் அரசும் கூட அங்கெழுந் தருளக் கண்டு."

இந்தப் பாடல் குளகம். சிலபகல்-சில தினங்கள்; ஒருமை பன்மை மயக்கம். கழிந்த-போன. பின்பு-பிறகு. திருக்கட வூரில்-திருக்கடவூரை: உருபு மயக்கம். நண்ணி-குங்குலியக் கலய நாயனார் அடைந்து. நிலவு-நிலைபெற்ற, தம்தம்முடைய பணியில்-திருப்பணிகளைச் செய்து கொண்டு. பணி: ஒருமை பன்மை மயக்கம். தங்கி. அந்தத் தலத்தில் தங்கியிருந்து. நிகழும்-வாழ்ந்து கொண்டிருக்கும். நாள்காலத்தில், நிகர்-தமக்கு ஒப்பு வேறு யாரும். இல்-இல்லாத; கடைக்குறை. காழி-சீர்காழியில் திருவவதாரம் செய்தருளிய.