பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம்

பெரிய புராணத்தில் 3-ஆவதாக விளங்கும் இலைமலிந்த சருக்கத்தில் ஐந்தாவதாக அமைந்திருப்பது மானக் கஞ்சாற. நாயனார் புராணம். அதில் வரும் முதற் பாடலின் கருத்து வருமாறு :

மேன்மையைப் பெற்ற கங்கையாற்றைத் தம்முடைய தலையில் உள்ள சிவந்த சடாபாரத்தின்மேல் தங்க வைத்த வராகிய சிவபெருமானார் தாம் விருப்பத்தை அடைந்து திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தலம், சாத் திரங்கள் கூறும் வழியை நன்றாகத் தெரிந்து கொள்பவர்கள் தாங்கள் பாடும் சிறப்பைப் பெற்றது பூங்கொம்பின் வழியே தேன் சொரியக் கொழுமையான பல வகையான பழங்களி லிருந்து அவற்றின் சாறு ஒழுகுவதும், கால்வாய்களின் வழியே நீர் பாயும் வயல்களையும், கரும்புச் செடிகளையும் கொண்டு அவற்றின் சாறு நறுமணம் கமழும் விழாக்கள் நடைபெறும் திருத்தலம் கஞ்சாறுார் என்பது ஆகும்.' பாடல் வருமாறு :

மேலாறு செஞ்சடைமேல் வைத்தவர்தாம் விரும்பியது

நூலாறு நன்குனர்வார் தாம்பாடும் கோன்மைய து கோலாறு தேன்பொழியக் கொழுங்கனியின் .

. . சாறொழுகும். காலாறு வயற்கரும்பின் கமழ்சாறுார் கஞ்சாறுார்.'

மேல்-மேன்மையைப் பெற்ற ஆறு-கங்கையாற்றை. செம்-தம்முடைய தலையில் உள்ள சிவந்த சடைமேல்சடாபாரத்தின் மேல். வைத்தவர்தாம்-தங்க வைத்தவராகிய சிவபெருமானார் தாம். விரும்பியது-விருப்பத்தை அடைந்து திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தலம் நூல்.