பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.32 பெரிய புராண விளக்கம்-1

பன்மை மயக்கம்; உருபு மயக்கம். கொலைப்பட்டார்கொல்ல செய்யப் பட்டார்கள்: ஒருமை பன்மை மயக்கம். முட்டாதார்-பகைவர்களோடு மோதாத வீார்கள்: ஒருமை பன்மை மயக்கம். கொல்-கொலை செய்யும். களத்தைபோர்க்களத்தை. விட்டு-விட்டு அகன்று. நிலைப்பட்டநிலையாக உண்டான, மெய்-உண்மையான, உண்மைப் பொருளை உணர்ந்த' எனலும் ஆம். உணர்வு-உணர்ச்சி யாகிய ஞானம். நேர்பட்ட உண்டான போதில்-சமயத்தில். அலைப்பட்ட அலைத்தலை உடைய. ஆர்வம்-ஆசை. முதல். முதலாகிய குற்றம்போல்-குற்றங்களைப் போல; ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: காமம், வெகுளி, மயக்கம் என்பன. ஆயினார்-ஆனார்கள் ஒருமை பன்மை மயக்கம். போர்க்களத்தை விட்டு ஒடிப்போன வீரர்கள் காமம் முதலிய குற்றங்களைப் போலப் பழிக்கு ஆளானார்கள் என்பது கருத்து.

பிறகு உள்ள 28-ஆம் பாடலின் கருத்து வருமாறு: இத்தகைய நிலையைப் பெற்ற கொடிய போர்க் களத்தில் பகைவர்களை எதிர்த்துத் தோற்றுப் போனதால் உண்டான அவமானத்தினால் தன்னுடைய பல சேனை வீரர்கள் போர்க்களத்திலிருந்து திரும்பி வந்த வீரர்களை அழைத்துக் கொண்டு, மின்னலைப் போல ஒளியை வீசும் வாளாயுதங்களை வீசிக்கொண்டு, வெற்றியை உடைய வீரரும் கொடிய ஆண் புலியைப் போன்றவருமாகிய ஏனாதி நாத நாயனாருக்கு முன்னால் போய் அதிசூரன் நேரில் போர் புரிந்தான். பாடல் வருமாறு:

இங்கிலைய வெங்களத்தில் ஏற்றழிந்த மானத்தால் தன்னுடைய பல்படைஞர் மீண்டார் தமைக்கொண்டு மின்னொளிவாள் வீசி விறல்வீரர் வெம்புலியே றன்னவர்தம் முன்சென்றதிசூரன் நேரடர்ந்தான். '

இந்நிலைய-இத்தகைய நிலையைப் பெற்ற, வெம். கொடிய. களத்தில்-போர்க்களத்தில், ஏற்றுப்கைவர்களை