பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் 365

பிறகு வரும் 4-ம் கவியின் உள்ளுறை வருமாறு: சேற்றைக் கொண்ட குளிர்ச்சியைப் பெற்ற வயல் களினுடைய இடத்தில் செழிப்புள்ள நெற்பயிற்களினுடைய கொழுமையான கதிர்கள் சென்று வேறாகப் பக்கத்தில் நெருங்கியுள்ள வேலியைப் பெற்ற பசுமையான பாக்கு மரத்தினுடைய கழுத்தைத் தடவி மாறுகளோடு எழுந்துள்ள உறுதியான குலைகளை வளையுமாறு செய்ய வண்டுகள் அலையும் சோலையில் உழவர்கள் தாறுகளை அறுக்கும் நீண்டதும் வளைந்ததும் ஆகிய அரிவாளைப் போன்றன வாகிய தனியான இடங்கள் அந்தக் கஞ்சாறுாரில் இருக் கின்றன. பாடல் வருமாறு: . - .

சேறணிதண் பழனவயல் செழு நெல்லின் கொழுங்கதிர் - போய் வேறருகு மிடை வேலிப் பைங் கமுகின் மிடறுரிஞ்சி

மாறெழுதிண் குலை வளைப்ப வண்டலைதண்

டலை உழவர் தாறரியும் நெடுங் கொடுவாள் அனையஉள .

தனிஇடங்கள் .' சேறு அணி.சேற்றைக் கொண்ட தண்-குளிர்ச்சியை உடைய. பழன-வயல்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். அயல்-பக்கங்களில்; ஒருமை பன்மை மயக்கம். செழுசெழிப்பாக வளர்ந்திருக்கும். நெல்லின்-நெற்பயிர்களினு டைய ஒருமை பன்மை மயக்கம். கொழும்-கொழுமையாக விளங்கும். கதிர்-கதிர்கள்: ஒருமை பன்மை மயக்கம். போய்-சென்று. வேறு-வேறாக. அருகு-பக்கங்களில்; ஒருமை பன்மை மயக்கம். மிடை-செறிந்த, வேலி.வேலிக்கு உள்ளே. .ப்: சந்தி. பைம்-பசுமையாகிய, கமுகின்-பாக்கு மரத்தி லுடைய மிடறு-கழுத்தை உரிஞ்சி-தடவி, மாறு-மாறுகள்: ஒருமை பன்மை மயக்கம்: மிலாறுகள். எழு-எழுந்த திண்உறுதியாகிய குலை-காய்களின் குலைகளை ஒருமை பன்மை மயக்கம். வளைப்ப-வளையுமாறு செய்ய. வண்டு-வண்டுகள்; ஒருமை பன்மை மயக்கம். அலை-தேனை நாடி அலைகின்ற,