பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.368 பெரிய புராண விளக்கம்-4

" மனைசாலும் கிலை அறத்தின் வழிவந்த வளம் பெருகும்

வினைசாலும் உழவு தொழில் மிக்க பெரும் குடிதுவன்றிப் புனைசாயல் மயில னையார் கடம்புரியப் புகல் முழவம் கனைசாறு மிடை வீதிக் கஞ்சாறு விளங்கிய தால்."

மனை-தங்களுடைய திருமாளிகைகளில்; ஒரு ைம பன்மை மயக்கம், சாலும்-அமைந்திருக்கும். நிலை-நிலையைப் பெற்ற அறத்தின்-இல்லறத்தின். வழி-வழியில். வந்ததாங்கள் ஈட்டிக் கொண்டுவந்து சேர்த்த. வளம்செல்வத்தின் வளம். பெருகும்-பெருகி விளங்கும். வினைதொழிலாக, சாலும்-அமையும். உழவு தொழில்-உழவாகிய தொழிலில். மிக்க-மிகுதியான சிறப்பைப் பெற்ற. பெரும்பெருமையைக் கொண்டிருக்கும். குடி-குடும்பங்கள்; ஒருமை பன்மை மயக்கம். குடிமக்கள்’ எனலும் ஆம். துவன்றி. சேர்ந்து. ப்: சந்தி. புனை-தாங்கள் அலங்காரமாகப் பெற்ற. சாயல் மயில் அனையார்-சாயல் மயில்களைப் போல அமைந்த பெண்மணிகள். மயில்: ஒருமை பன்மை மயக்கம். அனையார்: ஒருமை பன்மை மயக்கம். நடம்-நடனத்தை. புரிய-செய்ய, ப், சந்தி. புகல்-அப்போது அடிக்கப்படும். முழவம்-மத்தளம். கனை-ஒலிக்கும். சாறு-திருவிழா. மிடைசெறிந்திருக்கும். வீதி-தெருக்களை உடையதாக ஒருமை பன்மை மயக்கம். க், சந்தி, கஞ்சாறு-அந்தக் கஞ்சாறுார். விளங்கியது-விளக்கத்தைப் பெற்றது. ஆல்: ஈற்றசை நிலை.

பிறகு உள்ள 7-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்தக் கஞ்சாறுாரில் தம்முடைய சாதியினுடைய தலைவராகவும், மன்னருடைய படைகளின் தளபதியாகவும் சொல்லுவதற்கு அருமையாக இருக்கும் தம்முடைய குடும்பம் விளக்கத்தை அடையும் வண்ணம் உண்மையான பரம் பொருளைத் தெரிந்து கொண்டு சிவஞானத்தைப் பெற்ற வரும், மேம்பாட்டைக் கொண்ட வேளாளர்களினுடைய குடும்பங்களினுடைய தன்மையில் சேமித்த நிதியைப் போன்ற மேம்பாட்டைப் பெற்றவராகிய மானக் கஞ்சாற நாயனார் திருவவதாரம் செய்தருளினார். பாடல் வருமாறு: