பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் . . 375

அடையுமாறு புரிந்தருளிய. இத்தன்மையராம்-இத்தகைய பான்மையை உடையவரர்கும். பெரியவர்க்கு-பெருமையைப் பெற்றவராகிய மானக் கஞ்சாற நாயனாருக்கு, முன்-முன்பு. சில நாள்-சில தினங்கள் ; ஒருமை பன்மை மயக்கம். பிள்ளைப் பேறு-குழந்தையைப் பெறும் பாக்கியம். இன்மை யினால்-இல்லாமையால். அரி-ஹரியாகிய தி ரு மா ல். அறியா-பன்றி உரு எடுத்துத் தேடியும் காண முடியாத, மலர்க்கழல்கள்-வெற்றிக் கழல்களைப் பூண்ட செந்தாமரை மலர்களைப் போன்ற திருவடிகளை ஆகு பெயர். மலர்: ஒருமை மன்மை மயக்கம். அறியாமை-தெரிந்து கொள்ளாத தன்மையை. அறியாதார்-அறியாதவராகிய அந்த நாயனார். வரு-தமக்கு உண்டாகும். மகவு-குழந்தையை. பெறற் பொருட்டு-பெறுவதற்காக. மனத்து-தம்முடைய திருவுள்ளத் தில் கொண்ட அருளால்-சிவபெருமானுடைய திருவருளால். வழுத்தினார்-அந்தப் பெருமானைத் துதித்து வணங்கினார்.

பிறகு உள்ள 11-ஆம் பாடலின் கருத்து விருமாறு :

'சங்கக் குழைகளோடு அசையும் தாழ்ந்த திருச் செவிகளைக் கொண்டவராகிய சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளும் நடராஜப் பெருமானார் வழங்கிய திருவருளி னால் மழையை வருவிப்பதற்ரு உதவும் பெருமையைக் கொண்ட கற்பையுடைய மானக் கஞ்சாற நாயனாருடைய இல்லக்கிழத்தியாரிடத்தில் முன்பிறவியில் செய்திருக்கும் பாவங்களினுடைய பிரயோசனம் சேர்ந்திருக்கும். இந்த மனிதப் பிறவியில் உண்டாகும் கொடுமையாகிய நில்ை யிலிருந்து விடுபடும் வழியைத் தமக்கு உதவும் பொருட்டுப் பூங்கொடியைப் போன்ற ஒரு பெண் குழந்தையைப் பெற்று. எடுத்து வள்ர்த்தார். பாடல் வருமாறு:

' குழைக்கலையும் வடிகாதிற் கூத்தனார் அருளாலே

மழைக்குதவும் பெருங்கற்பின் மனைக்கிழத்தி யார் - தம்பால்