பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் 377

பெண்டாட்டி ... இவர் மூவர் பெய்யெனப் பெய்யும்மழை.', 'பெண்பால், கொழுநன் வழிச் செலவும் இம்மூன்றும், திங்கள் மும்மாரிக்கு வித்து.' (திரிகடுகம், 96, 98) என்று வேறு புலவர்களும், "வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது, நீணில் வேந்தர் கொற்றம் குறையாது, பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு.', 'பத்தினி மகளிர் பெய்யெனப் பெய்யும் மழை என்பது உம்.' (சிலப்பதிகாரம், 15: 147-7, பதிகம், 89, அரும்பதவுரை) என்று இளங்கோவடிகளும், வான்

தருகற்பின் மனையுறை மகளிர்.', 'புண்ணியம் முட்டாள் பொழிமழை தரூஉம், அரும்பெறல் மகளிர் பத்தினிப் பெண்டிரும்.', 'மண்டினி ஞாலத்து மழைவளம் தரூஉம், பெண்டிர்.', 'ஓங்கிரு வானத்து மழையும்நின் மொழியது.”

(மணிமேகலை, 15: 77, 16; 49-50, 22: 45-6, 99) என்று சீத்தலைச் சாத்தனாரும், நாடும் ஊரும் நனிபுகழ்ந் தேத்தலும், பீடு றும்மழை பெய்கெனப் பெய்தலும், கூட லாற்றவர் நல்லது கூறுங்கால், பாடு சான்மிகு பத்தினிக்

காவதே.' (வளையாபதி) என்று வேறு பு ல வ ரு ம், "மாதரார், கற்பின் நின்றன அறங்கள் அன்னவர், கற்பின் நின்றன காலமாரியே. (நாட்டுப் படலம், 59)

என்று கம்பரும், 'தெய்வம் தொழா அள் கொழுநற் றொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற அப், பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்." (மணிமேகலை, 22: 59-61) என்று அதே சீத்தலைச் சாத்தனாரும் பாடியருளியவற்றைக் காண்க.

பிறகு வரும் 12-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

'அந்தப் பெண் குழந்தை பிறந்ததனால் உண்டான பெரிய களிப்பினால் பெருமையைப் பெற்ற பழைய ஊராகிய கஞ்சாறுாரில் வாழும் மக்கள் மகிழ்ச்சி தங்களுக்குச் சிறப் பாக உண்டாக, சிறப்பை உடைய நிறைந்த மங்கல வாத்தி யங்கள் முழக்கத்தைச் செய்ய எல்லாத் தேவர்களினுடைய தலைவனாகிய சிவபெருமானுடைய திருவருளினால் தருமங் களில் தலை சிறந்து நின்ற மக்கள் எல்லாருக்கும் அளவு