பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.382 - பெரிய புராண விளக்கம்-4

மயக்கம். செய்-காட்டும். முதற் பருவம்-முதற் பருவமாகிய பேதைப் பருவத்துக்கு அடுத்த பெதும்பைப் பருவத்தை; இசை எச்சம். நண்ணினள்-அடைந்தாள். -

கொங்கைகளுக்கு அரும்புகள் உவமை: 'அரும்பும் குரும்பையும் அலைத்தமென் கொங்கை.', 'அருப்பினார் முலை மங்கை பங்கினன்.”, “அரும்பமர் கொங்கை ஒர்பால் மகிழ்ந்த அற்புதம்.” என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாய னாரும், 'அருப்புப்போல் முலையார் அல்லல் வாழ்க்கைமேல் விருப்புச் சேர்நிலை விட்டு.,அருப்போட்டு முலைமடவாள் பாகம் தோன்றும்.' என்று திருநாவுக்கரசு நாயனாரும், "அரும்பொத்த மென்முலை ஆயிழையார்க்கு." என்று திரு மூலரும், தாமரை மொட்டும் கொங்கையும் வாண்முக முமாக் கொண்டாள்.” என்று சேர மான் பெருமாள் நாய னாரும், 'குவிமுகிழ் இளமுலை.” என்று நக்கீரரும், 'பொற். றாமரையின் முற்றா முகிழென, உலகே மீன்றும் நிலையில் தளரா, முலையுடன்.’’ என்று பட்டினத்துப் பிள்ளையாரும், 'கொங்கை கோங்கரும்பை வீழ்ப்ப அருப்பு மென் முலை யினார் தம் அணி மலர்க்கைப்பிடித்து.' என்று சேக்கிழாரும் பாடியருளியவற்றையும், கமலப் பொதியினை நகுவன புணர்முலை.” (நாட்டுப் படலம், 44), 'அருப்பு மென்முலை யாளங் கொரயிழை.' (உலாவியற் படலம், 22) என்று கம்பர் பாடியவற்றையும் காண்க.

பெண்மணிகளுக்கு அமுதம் உவமை: கடல்பட்ட இன்னமுதம் அன்னாள்.', 'ஆரா அமுதம் அவயவம் பெற் றனைய சீரார் தெரிவைப் பிராயத்தாள்.' என்று சேரமான் பெருமாள் நாயனாரும், வேட்ட மின்னிடை இன்ன முதத் தினை.', கோதிலா அமுதம் அனையவள்.', 'பெண்ண முதனையாள்.' எனறு சேக்கிழாரும், ஆவியே அமுதே என நினைந்துருகி அவரவர் பணைமுலை துணையா.’’ என்று திருமங்கை ஆழ்வாரும், 'அன்னே தேனே ஆரமிர்தே." (மிதிலைக் க்ாட்சிப் படலம், 30), அமிழ்தினைச் சுவை செய்தென்ன அழகினுக் கழகு செய்தார்.", ஆரமிழ்தும்