பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 . பெரிய புராண விளக்கம்-A,

கூடப் படலம், 63), பெண்ணியல் தீபம் அன்ன பேரெழிலாட்டி. (அயோமுகிப் படலம், 5), செந். தாமரைப் பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும் நந்தா விளக்கை.' (இரணியன் வதைப் படலம், 161), “விளக்கொரு விளக்கம் தாங்கி மின்னணி அரவிற் சுற்றி, இளைப்புறு. மருங்குல் நோவ முலை சுமந்தியங்கும் என்னா, முளைப் பின்றநெற்றி வான மடந்தையர் முன்னும் பின்னும் வளைத்தனர்." (மாயா சனகப் படலம், 7), விளக்கையும் விளக்கும் மேனி.' (களியாட்டுப் படலம், 5) என்று கம்பர் பாடியவற்றையும், "மண்ணிற் பிறந்த மணிவிளக்கோ.' (சம்புவன் வதைப் படலம்,58) என்று உத்தர காண்டத்தில் வருவனவற்றையும், "கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே..' என்று ஆண்டாளும், மனைக்கு விளக் காகிய வாணுதல்..' (புறநானூறு, 314:1) என்று ஐயூர்முடவ னாரும், மனைக்கு விளக்கம் மடவாள்.” (கான்மணிக் கடிகை 104) என்று வேறு ஒரு புலவரும், திகழ்ந்தெரி விளக்கெனத் திலகம் ஆயினார்.' (சீவக சிந்தாமணி,2640): என்று திருத்தக்க தேவரும் பாடியவற்றைக் காண்க.

பிறகு வரும் 17-ஆம் டாடலின் கருத்து வருமாறு:

'அவ்வாறு தம்முடைய திருமாளிகைக்கு வந்த முதிய அறிஞர்களை மானக் கஞ்சாற நாயனார் முன்புள்ள தம்முடைய குடும்பத்தின் முறைமைப்படி விருப்பத்தை, அடைந்து வரவேற்று அவர்கள் கூறிய திருமணத்தைப்பற்றிய திறத்தைக் கேட்டு, “எங்களுடைய பரம்பரைக்குத் தகுதியாக இருக்கும் இயல்பினால் பொருந்தும்” என்று தம்முடைய திருவுள்ளம் மகிழ்ச்சியைப் பெறும் வண்ணம் திருவாய் மல்ர்ந்தருளிச் செய்து அந்தத் திருமணத்துக்குத் தம்முடைய சம்மதத்தைத் தெரிவித்து அந்த முதியவர் களைப் போகுமாறு அனுப்பினார். பாடல் வருமாறு:

வந்தமூ தறிவோரை மானக்கஞ் சாறனார் முந்தைமுறை மையின்விரும்பி மொழிந்த மணத்திறம்

- கேட்டே