பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38ಶಿ . பெரிய புராண விளக்கம்-4

கின்றநிலை மையின் இரண்டு திறத்தார்க்கும் நேர்வாய மன்றல்வினை மங்கலநாள் மதிநூல்வல் லவர்

வகுத்தார் .'

சென்றவரும்-அவ்வாறு போன முதியவர்களும்: ஒருமை பன்மை மயக்கம். கஞ்சாறர்-மானக் கஞ்சாற நாயனார். மணம்-திருமணத்துக்கு. இசைந்தபடி-சம்மதித்த வண்ணத் தை. செப்ப-கூற. க்: சந்தி. குன்று-மலைகளை ஒருமை பன்மை மயக்கம். அணைய-போன்ற புயத்து-தோள்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம், ஆடவர்களின் தோளுக்கு மலையை உவமையாகச் சொன்ன இடங்களை முன்பே கூறினோம்; ஆ ண் டு க் கண் டு ண ர் க. ஏயர் கோனாரும்-ஏயர்கோன் கலிக்காம நாயனாரும். மிக-மிகுதி யாக விரும்பி-விருப்பத்தை அடைந்து நின்ற நிலை மையின்-நின்ற நிலையினால், இரண்டு திறத்தார்க்கும்மணமகன், மணமகள் என்னும் இரண்டு பேர்களினுடைய வீட்டில் உள்ளவர்களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். நேர்வாய-சம்மதமாகிய, மன்றல்-திருமணமாகிய, வினை மங்கல-மங்கலமான சடங்குக்கு. நாள்-ஒரு முகூர்த்த நாளை. மதி-அறிவைப் பெற்ற நூல்-சோதிட நூலில். வல்லவர்-வல்லமையை பெற்றவராகிய சோதிடர் ஒருவர். வகுத்தார்-அமைத்துக் கொடுத்தார்.

அடுத்து வரும் 19-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

மங்கலமாக விளங்கும் காரியத்தில் விருப்பத்தை அடைந்து புதல்வியைப் பெற்றெடுத்த வள்ளலாராகிய மானக் கஞ்சrற நாயனார் தம்முடைய சாதியில் உள்ள புகழ் நீண்ட உறவினர்கள் எல்லாரும் விளங்கும் பெரிய மகிழ்ச்சி தங்களுக்குச் சிறப்பாக உண்டாகப் பொங்கி எழுந்த வெள்ளையாகிய நெல் முளைகள் முதலியவற்றைப் பாலிகை களில் முளைக்கச் செய்து பொன்னால் ஆகிய அணி கலன்கள் தம்முடைய திருமாளிகையாகிய இடத்தில் நெருங்கி அமையுமாறு தேன் நிரம்பிய மலர்கள் மலர்ந்த