பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் 391

பின்பு உள்ள 21-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : "வள்ளலாராகிய ஏயர்கோன் கலிக்காம நாயனாருடைய திருமணம் அந்தக் கஞ்சாறுாரின் பக்கத்தில் அடையாத முன்பே செந்தாமரை மலர்களைப் போன்ற கண்களையும், ஒளியை வீசும் அணிகலன்களையும் அணிந்த அந்தப் பெண் மணியைப் பெற்றவர்களாகிய மானக் கஞ்சாற நாயனார், அவருடைய பத்தினியார் ஆகிய இருவரும் வாழும் அழகிய திருமாளிகையில் ஒரு வழியாகத் தெளிவாக உள்ள கடல் அலைகளின் நீர் சூழ்ந்த இந்த உலகத்தில் வாழும் மக்கள் உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம் அந்த மானக் கஞ்சாற நாயனாருடைய திருவுள்ளத்தில் நிலை பேற்றை உடைய பரம்பொருளாகிய தேவர்களினுடைய தலைவராகிய சிவ பெருமானார் அடைவாரானார். பாடல் வருமாறு :

வள்ளலார் மணம் அவ்வூர் மருங்கணையா முன்

மலர்க்கண் ஒள்ளிழையைப் பயந்தார்தம் திருமனையில் ஒருவழியே தெள்ளுதிரை நீருலகம் உய்வதற்கு மற்றவர்தம் உள்ளநிலைப் பொருளாய உம்பர்பிரான் தாம்

அணைவார்.'

வள்ளலார்-வள்ளலாராகிய ஏயர்கோன் கலிக்காம நாய னாருடைய. மணம்-திருமணம். அவ்வூர்-அந்தக் கஞ்சாறுாரி

னுடைய. மருங்கு-பக்கத்தை. அணையா-அடையாத. முன்- - முன்பே. மலர்-செந்தாமரை மலர்களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். நீலோற் பல மலர்களைப் போன்ற' எனலும் ஆம். க்: சந்தி. கண்-கண்களையும்; ஒருமை பன்மை மயக்கம். ஒள்-ஒளியை வீசும். இழையை-அணி கலன்களையும் அணிந்த அந்தப் பெண்மணியை, ஒள் இழை: அன்மொழித் தொகை. இழை. ஒருமை பன்மை மயக்கம். அவையாவன : தலையணியாகிய சீதேவி, அராக் கொடி, புல்லாக்கு, தோடுகள், வங்கி, காசு மாலை, முத்து மாலை, நவரத்தின மாலை, ஒட்டியாணம், காற் காப் புக்கள், சிலம்புகள், பாத சரங்கள் முதலியவை. ப்: சந்தி.