பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் 399.

மறைத்துக் கொண்டு எழுந்தருளி வரும் அந்த மாவிரத. முனிவரை வணங்கச் செய்தார். பாடல் வருமாறு:

ஞானச்செய் தவரடிமேற் பணிந்துமனையகம்கண்ணி, மானக்கஞ் சாறனார் மணக்கோலம் புனைந்திருந்த தேனக்க மலர்க்கூந்தல் திருமகளைக்

停, * கொண்டணைந்து பானற்கந் தரம்மறைத்து வருமவரைப் பணிவித்தார்." ஞான-சிவஞானத்தைப் பெற்ற, ச்: சந்தி. செய்செம்மையை உடைய. தவர்-தவசியாராகிய அந்த மாவிரத. முனிவருடைய. அடிமேல்-திருவடிகளின் மேல்; ஒருமை பன்மை மயக்கம். பணிந்து-விழுந்து அவரை வணங்கிவிட்டு. மனை-தம்முடைய திருமாளிகைக்கு. அகம்-உள்ளே, நண்ணிசென்று. மானக் கஞ்சாற்னார்-அந்த மானக் கஞ்சாற நாயனார். மணக்கோலம்-திருமணக் கோலத்தை. புனைந் திருந்த-பூண்டு கொண்டிருந்த தேன்.நக்க-தேன் நிரம்பி, விளங்கிய ம ல ர் க. ைள அணிந்திருந்த ஒருமை பன்மை மயக்கம். அந்த மலர்களாவன: மல்லிகை மலர், முல்லை. மலர், இருவாட்சி மலர், தாழம் பூ, மகிழ மலர், வெள்ளைக் செவ்வந்தி மலர், மஞ்சட் செவ்வந்தி மலர், கதம்பம் முதலியவை. க்: சந்தி. கூந்தல்-கூந்தலைப் பெற்ற திரு அழகிய. மகளை-தம்முடைய பு த ல்வி ைய. க்: சந்தி) கொண்டு-அழைத்துக் கொண்டு. அணைந்து-வந்து சேர்ந்து. பானல்-ஆலகால விடத்தை உண்டமையால் நீலோற்பல மலரைப் போன்ற கந்தரம்-தம்முடைய திருக்கழுத்தை, மறைத்து-தெரியாதபடி மறைத்துக் கொண்டு. வரும். எழுந்தருளி வரும். அவரை-அந்த மாவிரத முனி வரை. ப்: சந்தி. பணிவித்தார்-தம்முடைய புதல்வியை வனங்கச் செய்தார். -

பிறகு உள்ள 29-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அந்த மாவிரத முன்வர் தம்முடைய திருவடிகளின் மேல் தரையில் விழுந்து வணங்கி எழுந்திருந்த மடப்பத்தையும் பூங்கொடியைப் போன்ற தோற்றப் போலிவையும் பெற்ற