பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் 405

எழும்பரிவு கம்பக்கல் உனக்கிருந்த பரிசிந்தச் செழும்புவனங் களில் ஏறச் செய்தோம்." என்றருள்

- - செய்தார் .'

விழுந்து-அவ்வாறு தரையில் விழுந்து. எழுந்து-பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. மெய்-தம்முடைய திருமேனியை. ம்: சந்தி. மறந்த-மறந்து போன மெய்உண்மையான. அன்பர் தமக்கு-பக்தராகிய மானக் கஞ்சாற நாயனாருக்கு. தம்: அசை நிலை. மதிக்கொழுந்துதம்முடைய தலையின் மேல் உள்ள சடாபாரத்தில் பிறைச் சந்திரனுடைய கொழுந்து. அலைய-அசையவும். விழும்ஆகாயத்திலிருந்து விழுந்த கால மயக்கம். கங்கை-கங்கை யாறு. குதித்த-குதித்துக் கொண்டு திருநடனம் புரிந்த, சடை-சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்ற. க்: சந்தி. கூத்தனார்-சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளும் நடராஜப் பெருமானார். எழும்பரிவு-உள்ளத்தில் எழுகின்ற, நம் பக்கல்-எம்மிடத்தில். உனக்கு இருந்த பரிசு-உனக்கு அமைந்திருந்த பக்தியின் இயல்பை. இந்தச் செழும்-இந்தச் செழுமையைப் பெற்ற. புவனங்களில்-உலகங்களில், ஏற. ஏறிப் பரவுமாறு. ச்: சந்தி. செய்தோம்-யாம் புரிந்தோம். என்று-என. அருள் செய்தார்-திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். -

அடுத்து உள்ள 33-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

தம்முடைய பக்கத்தில் பெருமையைப் பெற்று விளங்கும் சிவகணத் தலைவர்கள் வாழ்த்துக்களை எடுத்துக் கூறவும், தேவர்கள் தம்மோடு நெருங்கி வர இடப வாகனத்தின் மேல் ஏறிக் கொண்டு வானத்தில் நின்று கொண்டிருந்த நடராஜப் பெருமானாருடைய முன்னி லையில் நின்று கொண்டிருந்தவராகிய மானக் கஞ்சாற நாயனார் ஒருமைப்பாடு பொருந்திய திருவுள்ளத்தோடு, தம்முடைய திருக்கரங்களைத் தம்முடைய தலையின் மேல்