பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் 409

ஏயர்கோன் கலிக்காம நாயனார் அந்தச் சிந்தையினால் நினைப்பதற்கு அருமையாக உள்ள செயலை அங்கே சேர்ந்த வர்களிடம் கேட்டருளித் தம்முடைய புத்தியில் மிகுதியாக மகிழ்ச்சியை அடைந்து பரிசுத்தராகிய நடராஜப் பெரு மானார் வழங்கிய திருவருளை வாழ்த்திவிட்டுத் தம்முடைய திருவுள்ளம் தளர்ச்சியை அடைந்து திருவாய் மலர்ந்தருளிச் செய்த தி ரு வா க் கி னு ைடய திறத்தைக் கேட்டருளி.' :பாடல் வருமாறு:

வந்தணைந்த ஏயர்குல மன்னவனார் மற்றந்தச் சிங்தைகினை வரியசெயல் செறிந்தவர்யாற்

- . கேட்டருளிப் புந்தியினில் மிகஉவந்து புனிதனார் அருள்போற்றிச் சிங்தைதளர்ந் தருள்செய்த திருவாக்கின் திறம்கேட்டு.'

இந்தப் பாடல் குளகம். வந்து-அவ்வாறு மானக் கஞ்சாற நாயன்ாருடைய திருமாளிகைக்கு வந்து. அணைந்த-வந்து ேச ர் ந் த. ஏயர் குல-ஏயர் கு ல த் தி ன். மன்னவனார்அரசராகிய ஏயர்கோன் கலிக்காம நாயனார். மற்று: அசை நிலை. அந்தச் சிந்தை-அந்த உள்ளம். நினைவரிய-எண்ணு வதற்கு அருமையாக உள்ள. செயல்-செயலை. என்றது மானக் கஞ்சாற நாயனார் தம்முடைய புதல்வியின் கூந்தலை அடியோடு அரிந்து மாவிரதமுனிவருக்கு அளித்ததை. செறிந் தவர் பால்-அங்கே சேர்ந்திருந்தவர்களிடம்; ஒருமை பன்மை மயக்கம். கே ட் ட ரு ளி-கேள்விப்பட்டருளி. ப்: சந்தி. புந்தியினில்-தம்முடைய புத்தியில். மிக-மிகுதியாக. உவந்தும கி ழ் ச் சி ைய அடைந்து. புனிதனார்.பரிசுத்தராகிய நடராஜப் பெருமானார். அருள்-வானிலிருந்து வழங்கிய திருவருளை. போற்றி-வாழ்த்தி. ச்: சந் தி. சிந்தை-தம் முடைய திருவுள்ளம். தளர்ந்து-தளர்ச்சியை அடைந்து. அருள்செய்த-திருவாய் மலர்ந்தருளிச் செய்த. திருவாக்கின்நடராஜப் பெருமானாருடைய திருவாக்கினுடைய. திறம்திறத்தை. கேட்டு-கேட்டருளி. - -