பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 - . பெரிய புராண விளக்கம்-4

இது சேக்கிழார் அடுத்து வரும் அரிவாட்டாய நாயனார் புராணத்திற்குத் தோற்றுவாயாகப் பாடியருளியது. ஒருதம்முடைய ஒப்பற்ற மகள்-புதல்வியினுடைய. கூந்தல் தன்னை-கூந்தலை; தன்: அசை நிலை. வதுவை-அவளுடைய திருமணத்துக்குரிய நாள்-தினத்தில். ஒருவர்க்கு-ஒப்பற்ற வராகிய மாவிரத முனிவருக்கு. ஈந்த-வழங்கிய. பெருமை யார்-பெருமையைப் பெற்றவராகிய மானக் கஞ்சாற நாயனாருடைய தன்மை-இயல்பை. போற்றும்-வாழ்த்தும். பெருமை-பெரிய பான்மை.என்-அடியேனுடைய.அளவிற்றுஅறிவின் அளவுக்குள் அகப்படுவது. ஆமே-ஆகுமா. மருவியவயலில் இருந்த கமரில்-தரைப்பிளப்பில். புக்க-விழுந்த. மாவடு-மாவடுவைக் கடிக்கும். விடேல் என்-விடேல் என்றும். ஒசை-ஒலியை. உரிமையால்-பக்தர் என்ற உரிமையினால். கேட்க வல்லார்-கேட்பதற்கு வல்லவராகிய அரிவாட்டாய நாயனாருடைய திறம்-திருத்தொண்டின் வகையை. இனிஇனிமேல். உரைக்கலுற்றேன்-அடியேன் பாடலானேன்.