பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 - பெரிய புராண விளக்கம்-4

இவர்க்கு-இந்த அதிசூரருக்கு. எய்தாமை வேண்டும்-வராமல் இருக்கவேண்டும். என்று-என எண்ணி. இரும்-கருமையான. பலகை-கே டகத் ைத. நெய்-எண்ணெயைத் தடவிய. வாளுடன்-வாளாயுதத்தோடு. அடர்த்து-நின்று எதிர்த்து. நேர்வார் போல்-நேரில் நிற்பவரைப் போல. நேர்-அதி சூரனுக்கு நேரில் நின்றார்-நின்று கொண்டிருந்தார்.

பிறகு வரும் 40-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'அவ்வாறு அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த திருத் தொண்டராகிய ஏனாதி நாத நாயனாருடைய திருவுள்ளக் கருத்தை யார் தெரிந்து கொள்வார்? அவருக்கு முன்பு நின்று கொண்டிருந்த பாதகனாகிய அதிசூரனும் தன்னு டைய எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டான். இவ்வாறு நின்று கொண்டிருந்த அந்த நாயனாருடைய இயல்பை அறிபவராகி, அந்த நாயனாருக்குத் தம்முடைய திருவருளை வழங்க, மின்னலைப் போல இருந்த சிவந்த சடாபாரத்தைத் தம்முடைய தலையில் பெற்றவராகிய சிவபெருமானார் தாமே வெளிப்பட்டு நின்றருளினார். ப்ாடல் வருமாறு:

! அங்கின்ற தொண்டர் திருவுள்ளம் ஆர்.அறிவார்?

முன்கின்ற பாதகனும் தன்கருத்தே முற்றுவித்தான், இங்கின்ற தன்மை அறிவார் அவர்க்கருள . மின்னின்ற செஞ்சடையார் தாமே வெளிகின்றார். ' அந்நின்ற-அவ்வாறு அந்த இட்த்தில் நின்று கொண் டிருந்த தொண்டர்-திருத் தொண்டராகிய ஏனாதி நாத நாயனாருடைய திருவுள்ளம்-திருவுள்ளக் கருத்தை ஆகு பெயர். ஆர்-யார். அறிவார்-தெரிந்து கொள்வார்; யாராலும் தெரிந்து கொள்ள முடியாது என்பது கருத்து. முன்-அந்த நாயனாருக்கு முன்னால், நின்ற-நின்று கொண் டிருந்த. பாதகனும்-பாவச் செயல்களைப் புரிபவனாகிய அதிசூரனும். தன்-தன்னுடைய கருத்து-எண்ணத்தை. ஏ. அசைநிலை. முற்றுவித்தான்-நிறைவேற்றிக் கொண்டான்; ஏனாதி நாத நாயனாரைக் கொலை செய்து விட்டான்'