பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-46 பெரிய புராணி-4

வதற்கு என்-என்ன இருக்கிறது. வானோர்.தேவலோகத். தில் வாழும் தேவர்களினுடைய: ஒருமை பன்மை மயக்கம். பிரான்-தலைவனாகிய நடராஜப் பெருமான். அருளைவழங்கிய திருவருளை. ப்: சந்தி. பற்லலர்தம்-பகைவர் களுடைய ஒருமை பன்மை மயக்கம். தம்: அசைநிலை. கை-கைகளில் ஏந்தியிருந்த ஒருமை பன்மை மயக்கம். வாளால்-வாளாயுதங்களால்; ஒருமை பன்மை மயக்கம். பாசம் அறுத்தருளி-பந்தபாசத்தை அறுத்தருளி. உற்ற வரை - இருப்பவராகிய ஏனாதி நாத நாயனாரை. என்றும்;என்றைக்கும். உடன் பிரியா-தம்மோடு பிரியாமல் இருக்கும். அன்பு-பக்தியை. அருளி-வழங்கியருளி. ப்: சந்தி. 'பொன்-தங்கத்தாற் செய்த தொடியாள்-வளையல்களைத் தன்னுடைய திருக்கரங்களில் அணிந்த சிவகாம வல்லியை. தொடி ஒருமை பன்மை மயக்கம். பாகனார்-தம்முடைய வாமபாகத்தில் எழுந்தருளச் செய்த நடராஜப் பெருமானார். பொன்னம்பலம்-சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில்,விளங்கும் தங்கத்தை வேய்ந்த திருச்சிற்றம்பலத்தை. அணைந்தார்அடைந்தருளினார்.

இந்தப் புராணத்தில் இறுதியில் உள்ள 42-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

'தம்முடைய தலைவனாகிய நடராஜப் பெருமான் அணிந்து கொள்ளும் விபூதியினுடைய சார்பைப் பெற்ற அடியேங்களுண்டய தலைவராகிய ஏனாதி நாத நாயனா ருடைய வீரக்கழலைப் பூண்ட திருவடிகளை வணங்கி, தேவர்களின் தலைவனாகிய திருக்காளத்தியில் கோயில் கொண்டருளிய உத்தமராகிய காளஹஸ்தி ஈசுவரருக்குத் தம்முடைய கண்ணைப் பறித்து அப்பும் நம்முடைய தலைவ ராகிய கண்ணப்ப நாயனார் புரிந்தருளிய பணியை யாம் தெரிந்து கொண்டபடி இனிமேல் பாடத் தொடங்குவோம்.' பாடல் வருமாறு: - -

தம்பெருமான் சாத்தும் திருநீற்றுச் சார்புடைய எம்பெருமான் ஏனாதி நாதர் கழல் இறைஞ்சி