பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனாதி நாத நாயனார் புராணம் 47

உம்பர்பிரான் காளத்தி உத்தமர்க்குக் கண்அப்பும் கம்பெருமான் செய்தபணி காம்தெரிந்த வாறுரைப்பாம். '

இந்தப் பாடல் அடுத்து வரும் கண்ணப்ப நாயனார்.

புராணத்திற்குத் தோற்றுவாயாகச் சேக்கிழார் பாடியது. தம்-தம்முடைய. பெருமான்-தலைவனாகிய நடராஜப் பெருமான். சாத்தும்-அணியும். திருநீற்று-விபூதியினுடைய. |ச்: சந்தி, சார்புடைய-சார்பைப் பெற்ற, எம்பெருமான்அடியேனுடைய தலைவனாகிய, ஏனாதி நாதர்-ஏனாதி நாத நாயனாருடைய. கழல்-வீரக்கழலைப் பூண்ட திருவடிகளை; ஆகுபெயர். இறைஞ்சி-வணங்கி. உம்பர்-தேவர்களுடைய: ஒருமை பன்மை மயக்கம். பிரான்-தலைவனாகிய, காளத்திசீகாளத்தியில் கோயில் கொண்டருளியிருக்கும், உத்தமர்க்குஉத்தமராகிய காளஹஸ்தீசுவரருக்கு. க், சந்தி. கண்-தம் முடைய கண்ணை. அப்பும்-பறித்து அப்பும். நம்-நம் முடைய. பெருமான்-தலைவனாகிய கண்ணப்பன். செய்த:புரிந்த பணி-திருப்பணியை. நாம்-யாம். தெரிந்தவாறுஅறிந்தபடி உரைப்பாம்-இனிமேல் பாடுவோம்.

உத்தமர்: “ஒற்றி யூருறை உத்தமனே.', 'எனக் கொன்றும் இ ரங் கா த உத்தமனே.”, “கடவூருறை உத்தமனே.', 'உரைப்பனவே செய்தியால் எங்கள் உத்தமனே.', 'உத்த ம ராய் நின்ற ஒருவனார்.' உலகானானை உத்தமனை." என்று திருநாவுக்கரசு நாயனாரும், 'உத்தமன் அத்தன் உடையான்." என்று மாணிக்க வாசகரும், 'உத்தம சித்தன்.', 'உத்தமன்

சோதி' என்று திருமூலரும் பாடியருளியவற்றைக் காண்க.