பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 . . . பெரிய புராண விளக்கம்-4

னோடும்-யானைக் கன்றினுடனும். புன்-சிவந்த தலைமயிர்களைக் கொண்டதலைகளைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். சிறு-சிறிய. மகார்கள்-குழந்தைகள். புரிந்துவிரும்பி, உடன்-கூடி, ஆடல்-விளையாட்டைப் புரிவதை. அன்றி-அல்லாமல், அன்பு உறு-அன்பு மிக்க காதல்-விருப்பம். கூர-மிகுதியாக உண்டாகும் வண்ணம். அணையும்-வந்து சேரும். மான் பிணைகளோடும் - பெண்மான்களுடனும். இன்பு உற-இன்பம் உண்டாகுமாறு. மருவி-சேர்ந்து. ஆடும் -விளையாடும். எயிற்றியர்-வேடிச்சிகளினுடைய மகளிர்புதல்விகள். எங்கும்.எந்த இடத்திலும் காணப்படுவார்கள்

அடுத்து வரும் 5-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

வெற்றியைக் கொள்ளும் ஆயுதங்களையும், கொடுமை யையும், கொடிய வார்த்தைகளையும் உடைய வேடர்களி னுடைய கூட்டம் ஒவ்வொன்றிலும், "கொலைசெய், வாளி ன்ால் வீசிக்கொல், ஈட்டியினால் குத்து' என முழங்கிக் கூடிய ஒலியே அல்லாமல் சில அரித்து எழும் ஓசையைப் பெற்ற உடுக்குக்களும், ஊது கொம்புகளும், சிறிய அடிக்கும் பக்கத்தைக் கொண்ட சிறு பறைகளும் சேர்ந்து கல் என்று முழங்கும் முழக்கத்திற்கு மேலாகவும் மலையிலிருந்து குதிக்கும் அருவி ஒலிக்கும் பேரொலி எவ்விடத்திலும் கேட்கும். பாடல் வருமாறு: - * வெல்படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர்

- - ? - கூட்டம் தோறும்

கொல், எறி, குத்தென் றார்த்துக் குழுமிய ஓசை அன்றிச்

சில்லரித் துடியும் கொம்பும் சிறுகண்ஆ குளியும் கூடிக் கல்லெனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும்.'

வெல்-வெற்றியைக் கொள்ளும். படை-வில், அம்பு. வாள், ஈட்டி முதலிய ஆயுதங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். த், சந்தி. தறுகண்-கொடுமையையும், வெம். கொடுமையாக் இருக்கும். சொல்-வார்த்தைகளையும் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம். வேட்டுவர்-வேடர்கள்: