பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 - பெரிய புராண விளக்கம்-4

ஏறுடை வானங் தன்னில் இடிக்குரல் எழிலி யோடு மாறுகொள் முழக்கம் காட்டும் மதக்கைமா கிரைகள்

- * , - எங்கும். '

ஆறு அலைத்து-வழிப்போகும் மக்களைத் துன்புறுத்தி அவர்களிடம் உள்ள பொருள்களைப் பறித்துக் கொண்டு அவற்றை வைத்துக் கொண்டு. உண்ணும்-உணவைப் பெற்று உண்ணும். வேடர்-வேடர்கள்; ஒருமை பன்மை மயக்கம். அயல்-வேறு. புலம்-இடங்களிலிருந்து: ஒருமை பன்மை மயக்கம். கவர்ந்து-கொள்ளையடித்து, கொண்டகொண்டு வந்த வேறு-வேறு வேறாகிய, பல்-பல. உருவின்நிறங்களோடு; ஒருமை பன்மை மயக்கம். மிக்கு-மிகுதியாக இருந்து. விரவும்-வந்து சேரும். ஆன்-பசுமாடுகளினுடைய; ஒருமை பன்மை மயக்கம். நிரைகள்-வரிசைகளை. அன்றிஅல்லாமல். ஏறுடை-இடியேற்றைப் பெற்ற, வானந்தன்னில் -ஆகாயத்தில். தன்: அசைநிலை. இடிக்குரல்-இடிக்கும் இடியினுடைய சத்தம். எழிலியோடு-மேகங்கள் முழங்கும் முழக்கத்தோடு; ஆகுபெயர். எழிலி: ஒருமை பன்மை மயக்கம். மாறுகொள்-மாறுபட்ட எதிரில் முழங்கும்’ எனலும் ஆம். முழக்கம்-முழக்கத்தை. காட் டு ம்-காண் பிக்கும். மத-கன்ன மதம், கபோல மதம், பீஜ மதம் என்னும் மூன்று மதங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். க் : சந்தி. கை-துதிக்கைகளையும் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். மா-யானைகளினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நிரைகள்-வரிசைகள். எங்கும்-எந்த இடத்திலும் காட்சி அளிக்கும். -

பின்பு வரும் 7-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

மை சேர்ந்ததைப் போன்ற கருமையான உடம்புகளை யும், கொடுமையான வேலைகளையும் கொண்ட வேடர்கள் தங்களிடம் பயத்தையும் கருணையையும் எந்தக் காலத் திலும் அடைதல் இல்லாதவர்கள்; தாங்கள் உடுக்கும் உண்டகள் வலிமைய்ான தோல்களாகப் பெற்றவர்கள்;