பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பெரிய புராண விளக்கம்-4

பின்பு உள்ள 8-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: "இயல்பினால் தவத்தை முன்பிறப்பில் புரிந்தவன் ஆனாலும் அந்த நாகன் என்பவன் வேடர்களின் சாதியில் பிறந்த பிறப்பினுடைய சார்பினால் குற்றத்தையே நல்ல குணமாகக் கொண்டு வாழ்பவன்; கொடிய தன்மையிலேயே தலை சிறந்து நின்றிருப்பவன்; வில்லைப் பயன்படுத்தும் தொழிலில் அமையும் வீரத்தில் மிக்க சிறப்பைப் பெற்றவன்; கொடிய கோபத்தைக் கொண்ட சிங்கத்தைப் போல விளங்குபவன்; அவனுடைய குறிஞ்சி நிலத்து ஊராகிய உடுப்பூரில் வாழும் வாழ்க்கைக்குத் துணைவியாகிய இல் லாளும் தத்தை என்னும் பெயரைப் பெற்றவள். பாடல் வருமாறு: - -

பெற்றியால் தவம் முன் செய்தா னாயினும் பிறப்பின்

' சார்பால். குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலைகின்

- . . . றுள்ளான்; . விற்றொழில் விறலின் மிக்கான், வெஞ்சின மடங்கல்

- - போல்வான்;. மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை

  • என்பாள். பெற்றியால்-இயல்பினால், தவம்-தவத்தை. முன்-முன் பிறப்பில். செய்தான்-புரிந்தவன். ஆயினும்-ஆனாலும், பிறப்பின்-வேடனாகப் பிறந்த பிறப்பினுடைய சார்பால்சார்பினால், குற்றமே.குற்றத்தையே. குணமா-நல்ல குண மாகக் கொண்டு. வாழ்வான்-தன்னுடைய வாழ்க்கையை நடத்துபவன். கொடுமையே-கொடிய செயல்களிலேயே ஆகுபெயர். தலை நின்று-தலை சிறந்து நின்று. உள்ளான்இருப்பவன். வில்-வில்லைப் பயன்படுத்தும். தொழில்தொழிலில் அமையும். விறலின்-வீரத்தில், மிக்கான்-மிக்க சிறப்பைப் பெற்றவன், வெம்-கொடிய, சின-கோபம் மூண்ட, மடங்கல்-சிங்கத்தை. போல்வான்-போல விளங்கு. பவன். மற்று: அசைநிலை. அவன்-அந்த நாகனுடைய.