பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 - பெரிய புர்ான விளக்கம்-4

தடவிசாலமான க் சந்தி, கை-வலத்திருக்கையையும். வென்றி.-சூரபதுமனை வென்ற வெற்றியையும் பெற்ற, அண்ணலார்-தலைவராகிய முருகப் பெருமானார். அருளி' னால்-வழங்கிய திருவருளினால். ஏ. ஈற்றசை நிலை.

அடுத்து வரும் 13-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு :

காட்டில் வாழும் வேடர்களினுடைய சாதி விளக் கத்தை அடையும் வண்ணம் நாகனுடைய மனைவியாகிய தத்தையினிடம் கருப்பம் உண்டாக, குறைவு இல்லாத, பூசைக்குரிய செயல்களை மிகுதியாகப் புரிந்து, செய்ய வேண்டிய கடமைகளை ஆட்டைப் பலிகொடுக்கும் வெறி' யாட்டினோடும் நடத்தி, உரியவையான அந்தப் பத்து மாதங்கள் கழிய, அளவு இல்லாமல் முன் பிறவியில் நாகனும் தத்தையும் புரிந்த தவத்தின் பயனால் பாலைப் போன்ற வெண்மையான சந்திரனைப் பாற்கடல் பெற்றாற் போல அந்தத் தத்தை ஓர் ஆண் குழந்தையைப் பெற்ற சமயத் தில், பாடல் வருமாறு :

கானவர் குலம்வி ளங்கத்தத்தைபால் கருப்பம் டே ஊனமில் பலிகள் போக்கி உறுகடன் வெறியாட் டோடும்: ஆனஅத் திங்கள் செல்ல அளவில்செய் தவத்தி னாலே

பான்மதி உவரி ஈன்றா லெனமகப் பயந்த போது."

இந்தப் பாடலும் குளகம். கானவர்-காட்டில் வாழும் வேடர்களினுட்ைய: ஒருமை பன்மை மயக்கம். குலம்-சாதி. விளங்க-விளக்கத்தை அடையும் வண்ணம். த்: சந்தி. தத்தை பால்-நாகனுடைய மனைவியாகிய தத்தையிடம். கருப்பம் நீட-கருப்பம் உண்டாக, ஊனம்-குறை. இல்-இல்லாத, கடைக்குறை. பலிகள்-பூசைக்குரிய செயல்களை. போக்கிவிரிவாகச்செய்து. உறு-செய்ய வேண்டிய கடன்-கடமை களை ஒருமை பன்மை மயக்கம். வெறியாட்டோடும்

ஆட்டைப் பலிகொடுக்கும் வெறியாட்டின்ோடும். வெறி' யாட்டு-பூசாரி ஆட்டைப் பலிகொடுத்து ஆடும் ஆட்டம். ஆன உரியவை ஆன. அத்திங்கள் - அந்தப் பத்து