பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 65

மாதங்கள்; ஒருமை பன்மை மயக்கம். செல்ல-கழிய அளவு இல்-அளவு இல்லாத. இல்: கடைக்குறை. செய்-முன் பிறவி யில் நாகனும் தத்தையும் புரிந்த. தவத்தினால்-தவத்தின் பயனால் ஆகுபெயர். ஏ : அசைநிலை. பால்-பாலைப் போல வெண்மையான, மதி. சந்திரனை. உவரி-பாற்கடல். ஈன்றாலென-பெற்றாற் போல. என: இடைக்குறை. மகஒர் ஆண் குழந்தையை. ப்: சந்தி. பயந்த-தத்தை ஈன் றெடுத்த போது-சமயத்தில்.

பின்பு உள்ள 14-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

'யானையினுடைய பருத்த தந்தங்களில் உண்டான முத்துக்களையும், மூங்கிலில் உண்டாகிய செழுமையான இயல்பைப் பெற்ற முத்துக்களையும், மலையிலிருந்து பெற்ற மாணிக்கங்களையும் வேடர்கள் சொரிந்த மாரியே அல்லாமல், கோடுகளைப் பெற்ற வண்டுகள் அலைந்து மொய்க்கும் வண்ணம் ஆகாயத்திலிருந்து தேவர்கள் கற்பக மரத்தில் மலர்ந்த மலர்களை மழையைப் போல எல்லா இடங்களிலும் சொரிந்தார்கள்; விட்டு விட்டு ஒலிக்கும். சத்தத்தைப் பெற்ற சிறிய உடுக்குக்களே அல்லாமல் தேவர்கள் வாசிக்கும் துந்துபி என்னும் இசைக்கருவிகளும் முழங்கின. பாடல் வருமாறு :

கரிப்புரு மருப்பின் முத்தும், கழைவிளை செழுநீர்

முத்தும் பொருப்பினின் மணியும் வேடர் பொழிதரு -

- மழையே அன்றி வரிச்சுரும் புலைய வானின் மலர்மழை - - பொழிந்த தெங்கும்;

அரிக்குறும் துடியே அன்றி அமரர்துங்

- துபியும் ஆர்த்த. இது தத்தைக்கு ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியினால் நிகழ்ந்தவற்றைக் கூறும் பாடல். கரி-யானையினுடைய. ப்: சந்தி. பரு-பருத்த மருப்பின்-தந்தங்களில் உண்டான;

டே.-4-5 - -