பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணிப்ப நாயனார் புராணம் 7 I

செய்து-புரிந்து. விரை-நறுமணம் கமழும். இளம்-இளமை யான. தளிரும்-தளிர்களையும்; ஒருமை பன்ம்ை மயக்கம். சூட்டி-அந்தக் குழந்தையினுடைய தலையில் அணிந்து. வேம்பு-வேப்பந் தழைகளை ஒருமை பன்மை மயக்கம். வேப்பம் வித்துக்களை எனலும் ஆம். இழைத்து-கட்டி. இடை-நடுவில். ஏ. அசைநிலை. கோத்த மணி-கோவையாகக் கோத்த பாசிமணிகளையும்; ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி. கவடி-சோழிகளையும்; ஒருமை பன்மை மயக்கம். அரை-அந்தக் குழந்தையின் இடுப்பில். கட்டி-கட்டிவிட்டு: அழகு உற-அழகு பெறும் வண்ணம். வளர்க்கும்.வளர்த்து வரும். நாளில்-காலத்தில். .

பிறகு வரும் 19-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'இவ்வாறு வளர்ந்து வரும் முறையான ஒவ்வொரு பருவத்திலும் வளப்பம் மிக்க சிறப்போடு தங்களுடைய குலதெய்வத்திற்குப் பெரிய நிவேதனங்களை வழங்கிக் கூடியுள்ள பெரிய வீரத்தைக் கொண்ட வேடர்கள் எல்லோருக்கும் செல்வம் மிகுதியாக உள்ள ஆரவாரம் பொங்கி எழச் செழிப்பான களிப்பும் மகிழ்ச்சியும் உண். டாகுமாறு செய்து அருமையோடு அந்த ஆண் குழந்தையைப் பெற்றதனால் உண்டான பேரன்பும் தோன்றுமாறு அவனை வளர்த்து வந்தார்கள். பாடல் வருமாறு: -- - - - -

வருமுறைப் பருவம் தோறும் வளமிகு சிறப்பில் தெய்வப் பெருமடை கொடுத்துத் தொக்க பெருவிறல்வேடர்க்

r கெல்லாம் திருமலி துழனி.பொங்கச்செழுங்களி மகிழ்ச்சி செய்தே, அருமையிற் புதல்வர்ப் பெற்ற ஆர்வமும் தோன்ற

உய்த்தார். ' வரு-இவ்வாறு வளர்ந்து வரும். முறை-முறையான. ப்: சந்தி. பருவம் தோறும்-ஒவ்வொரு பருவத்திலும். வளம்வளப்பம்; செல்வ வளம். மிகு-மிக்க. சிறப்பில் சிறப்போடு; உருபு மயக்கம், தெய்வ-தங்களுடைய குலதெய்வத்திற்கு,