பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 75

சிவந்த அதரங்களைப் பெற்ற வாய் குதப்பிக் கொண்டே அந்தப் புதல்வர் வளர்கிறவர் ஆனார். பாடல் வருமாறு: தண்மலர் அலங்கல் தாதை தாய்மனம் களிப்ப வந்து புண்ணியக் கங்கை நீரிற் புனிதமாம் திருவாய் நீரில் உண்ணனைங் தமுதம் ஊறி ஒழுகிய மழலைத்

தீஞ்சொல் வண்ண மென் பவளச் செவ்வாய் குதட்டியே வளரா

கின்றார். ' தண்-குளிர்ச்சியை உடைய. மலர் அலங்கல்-மலர் மாலையை அணிந்த தாதை-தம்முடைய தந்தையாகிய நாகனும். தாய்-தம்முடைய அன்னையாகிய தத்தையும். மனம்-தங்களுடைய உள்ளங்கள்; ஒருமை பன்மை மயக்கம். களிப்ப-மகிழ்ச்சியை அடையும் வண்ணம். வந்து-அவர் களிடம் வந்து. புண்ணிய-புண்ணியமாகிய, க், சந்தி. கங்கை -கங்கையாற்றில் ஒடும். நீரில்-புனலைவிட, புனிதம் ஆம்தூயதாக இருக்கும். திரு-அழகிய வாய்-தம்முடைய வாயில் சுரக்கும். நீரில்-எச்சில் நீரினால், உருபு மயக்கம். உள் நனைந்து-உள்ளே நனைந்து. அமுதம்-அமுதத்தைப் போல. ஊறி ஒழுகிய-ஊற்றைப் போல ஊறி வெளிவந்த மழலைமழலையாகிய, த், சந்தி. தீம்-இனிமையைக் கொண்ட. சொல்-வார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். வண்ணசிவந்த நிறத்தை உடைய, மென்-மென்மையாகிய, பவளபவளத்தைப் போன்ற ச் சந்தி. செவ்-சிவந்த வாய்-அதரங் களைப் பெற்ற தம்முடைய வாயை. குதட்டியே-குதப்பிக் கொண்டே. வளரா நின்றார்-வளர்கிறவர் ஆனார், கல்லா மழலைக் கணியூறல் கலந்து கொஞ்சும் சொல்லால்' என வருவதைக் காண்க.

பவள வாய்: பவளத்துவர் வாயினாள்.' என்று திரு. ஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், வனபவள வாய் திறந்து. என்று திருநாவுக்கரசு நாயனாரும், பவளக் கனி' வாய்ப் பாவை." என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், 'பவளத் திருவாயால் அஞ்சேன் என்ன ஆசைப் பட்டேன்."