பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணப்ப நாயனார் புராணம் 77.

பார்த்து அது மலைக்குகை என்று எண்ணித் தம்முடைய தோற்றப் பொலிவைக் கொண்ட திருக்கரத்தை அந்த வாய்க்கு உள்ளே நீட்ட, அன்புடைய அவருடைய தந்தை யாகிய நாகன் அதைப் பார்த்துப் பசுமையான தழைகளைத் தன்னுடைய கையில் எடுத்துக் கொண்டு அந்தப் புலியை ஒட்ட, காளஹஸ்தீசுவரருடைய சூரிய சந்திரர்களென்னும் இரண்டு சுடர்களாகிய கண்களுக்கு உண்டாகும் துன்பத்தை தீர்க்கப் போகும் தம்முடைய அழகு வளரும் கண்களிலிருந்து நீர் பெருகி வருகின்ற துளிகளாகிய முத்துக்களை அவருடைய அன்னையாகிய அந்தத் தத்தை தன்னுடைய வாயால் அவருக்கு முத்தங்களைக் கொடுக்க, அவற்றைப் பெற்றுக் கொண்டு அவர் தம் கண்ணிரைப் போக்கிக் கொண்டு.” பாடல் வருமாறு:

பொருபுலிப் பார்வைப் பேழ்வாய் முழை எனப்

- பொற்கை நீட்டப்: பரிவுடைத் தந்தை கண்டு பைங் தழை கைக்கொண்

- டோச்ச. இருசுடர்க் குறுகண் தீர்க்கும் எழில்வளர் கண்ணtர்

- மல்கி வருதுளி முத்தம் அத்தாய் வாய்முத்தம்

கொள்ள மாற்றி.” இந்தப் பாடல் குளகம். பொரு-திண்ணனார் போர் புரிவதும்; வினையாலணையும் பெயர். பார்வை-கொடுமை யான பார்வையைப் பெற்றதும்; ஆகுபெயர். ப் : சந்தி. புலி-ஆகிய ஒரு புலியினுடைய. ப்: சந்தி. பேழ் வாய்-ஆழ மான வாயை. முழை-மலைக்குகை. என-என்று எண்ணி: இடைக்குறை. ப் : சந்தி. பொன்-தம்முடைய பொலிவைப் பெற்ற கை-திருக்கரத்தை. நீட்ட-அந்தப் புலியினுடைய வாய்க்கு உள்ளே நீட்ட. ப் : சந்தி. பரிவு உடை-அவரிடம் அன்பைப் பெற்ற, த் சந்தி. தந்தை-அவருடைய தகப்ப னாகிய நாகன். கண்டு-அதைப் பார்த்து. பைம்- பசுமை யான, தழை-தழைகளை, ஒருமை பன்மை மயக்கம். கை