பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 - - பெரிய புராண விளக்கம்-4

ஒருமை பன்மை மயக்கம். பல்-பல. பெரும்-பெரிய. கிளைஞர்-உறவினர்கள்; ஒருமை பன்மை மயக்கம். போற்றவாழ்த்துமாறு. ப்: சந்தி. பராய்க் கடன்-தங்கள் குலதெய் வத்தை வழிபடுவதற்குரிய கடமைகள்; ஒருமை பன்மை மயக்கம். அவையாவன பிரப்பரிசி வைத்தல், அடிக்கும் மணியை வைத்தல், தினை முதலிய நிவேதனப் பொருள்களை வைத்தல், சாம்பிராணியை வைத்தல், கற்பூசத்தை வைத்தல், வெற்றிலை பாக்குக்களை வைத்தல் முதலியவை. பலவும்-பலவற்றையும். செய்து-புரிந்து. வில்விழா-வில் விழாவை. எடுக்க-கொண்டாடுவீர்களாக. என்று-என. வேடர்-வேடர்களினுடைய. கோமான்-அரசனும் திண்ண னாருடைய தந்தையுமாகிய நாகன். விளம்பினான்-வேடர் களினிடம் கூறினான்.

அடுத்து வரும் 32-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "இவ்வாறு பல பொருள்களைத் தக்க முறையில் சேர்த்து வைத்துக் கொண்டு பலவகை ஆயுதங்களைத் தொழிலாளர் கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள, தேன் மலரும் கொன்றை மலர் மாலையை அணிந்தவராகிய காளஹஸ்தி ஈசுவரர் ஏந்தியிருக்கும் அழகிய வில் ஆகிய சிவந்த தங்கத் தால் அமைந்த மேரு என்னும் மலையானது பாற்கடலில் புகுந்து கட்ைந்தபோது ஆலகால விடத்தை உண்டாக்க அந்தக் காளஹஸ்தி ஈசுவரருக்கே பின்பும் காட்டில் வாழும் பன்றியின் மாமிசத்தைத் திரு அமுதாகச் செய்யப் போகும் திண்ணனாருடைய வில்லுக்குக் காப்புக் கட்டி வேடர்கள் வைத்தார்கள். பாடல் வருமாறு:

பான்மையிற் சமைத்துக் கொண்டு படைக்கலம்

- - - - வினைஞர் ஏந்தத் தேனலர் கொன்றை யார்தம் திருச்சிலைச் செம்பொன் - - மேரு.

வானது கடலின் நஞ்சம் ஆக்கிட அவர்க்கே பின்னும் காணஊன் அமுதம் ஆக்கும் சிலையினைக் காப்புச்

- சேர்த்தார். '