பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 - பெரிய புராண விளக்கம்-5

தம்முடைய திருவுள்ளத்தில் மூண்டு எழும் பெருகிய பக்தி என்னும் திருவுருவத்தைப் பெற்றவர் மூர்த்தி நாயனார்." பாடல் வருமாறு: -

நாளும்பெரும் காதல் நயப்புறும் வேட்கை யாலே கேளும் துணையும் முதற்கேடில் பதங்கள் எல்லாம் - ஆளும்பெரு மான்அடித் தாமரை அல்ல தில்லார் “. . . மூளும்பெரு கன்பெனும் மூர்த்தியார் மூர்த்தி யார்தாம்.' நாளும்-ஒவ்வொரு நாளும். பெரும்-பெரியதாக இருக், கும். காதல்-காதலும், நயப்பு-நயப்பும், உறும்-அடையும். வேட்கையால்-விருப்பத்தால். ஏ. அசை நிலை. சேளும்உறவினர்களும் ஒருமை பன்மை மயக்கம். துணையும்துணை வர்களும், திணை ம ய க் கம், முதல்-முத லாகிய, கேடு-கெடுதல். இல்-இல்லாத, கன்டக்குறை. பதங்கள்-பதவிகள். எல்லாம்-யாவும். ஆளும்-தம்மை ஆளா, கக் கொள்ளும். பெருமான்-பெருமகனாகிய சோமசுந்தரப். பெருமானாருடைய, அடி-திருவடிகளாகிய, ஒருமை பன்மை: மயக்கம். த்: சந்தி. தாமரை-செந்தாமரை மலர்களை; ஒருமை பன்மை மயக்கம். அல்லது-அல்லாமல். இல்லார். வேறு எதையும் இல்லாதவர். மூளும்-மூண்டு எழும்.பெருகு. தம்முடைய திருவுள்ளத்தில் பெருகிய அன்பு-பக்தி. எனும்என்னும்; இடைக்குறை. மூர்த்தியார் - திருவுருவத்தைப். பெற்றவர். மூர்த்தியார்-அந்த மூர்த்தி நாயனார். தாம்: ஈற்றசை நிலை. - அன்பெனும் மூர்த்தியார்: "அவனுடைய வடிவெல் லாம் நம் பக்கல் அன்பு.’ எனப் பெரிய புராணத்தில் வரு வதைக் காண்க. -

அடுத்து வரும் 10-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்திக் காலத்தில் உதயமாகும் பிறைச் சந்திரனைத். தம்முடைய தலையின் மேல் உள்ள சடாபாரத்தின் மேல் அணியும் திருவாலவாய் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் அடியேனுடைய தந்தையைப் போன்ற சோமசுந்