பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்த்தி நாயனார் புராணம் 103

தரப் பெருமானுக்கு அணிவதற்குரிய சந்தனக் காப்பு ساهيَ யில் என்றைக்கும் தவறாமல் அந்தச் சந்தனக் காப்பை வழங்கும் செய்கையில் நிலைத்து நின்று அடியவர்கள் மகிழும் வண்ணம் அந்த மூர்த்தி நாயனார் தம்முடைய திருவுள்ளத் திற்கு இனியது ஆகிய திருப்பணியைப் புரிந்து கொண்டு. வரும் காலத்தில். பாடல் வருமாறு:

" அந்திப் பிறைசெஞ் சடைமேல் அணி ஆலவாயில்

எந்தைக் கணிசந் தனக்காப்பிடை என்றும் முட்டா அந்தச் செயலின் நிலைநின் றடியார் உவப்பச் சிந்தைக் கினிதாய திருப்பணி செய்யும் நாளில். 游 இந்தப் பாடல் குளகம். அந்தி-அந்தி நேரத்தில் உதய மாகும். ப்:சந்தி. பிறை-பிறைச் சந்திரனை. செஞ்சடை மேல்-தம்முடைய தலையின் மேல் உள்ள சடாபாரத்தின் மீது. அணி அணிந்து கொண்டிருக்கும். ஆலவாயில்-மதுரை மாநகரத்தில் விளங்கும் திருவாலவாய் என்னும் திருக்கோயி. வில் எழுந்தருளியிருக்கும். எந்தைக்கு-அடியேனுடைய தந் தையைப் போன்ற சோமசுந்தரப் பெருமானுக்கு. இது சேக் , கிழார் தம்மைச் சொல்லிக் கொண்டது. சிவபெருமானார். தந்தையாரைப் போன்றவர் என்பதைப் புலப்படுத்தும் இடங். களை வேறோரிடத்தில் கூறினோம்; ஆண்டுக்கண்டுனர்க. அணி - அணிவதற்குரிய, சந்தனக்காப்பு - சந்தனக்காப்பை. இடை-இடையில். என்றும்-என்றைக்கும். முட்டா-தவறாத. * அந்தச் செயலின் அந்தச் சந்தனக் காப்பை வழங்கும் செய். கையில். நிலைநின்று-நிலைத்து நின்று. அடியார்-அடியவர் கள்; ஒருமை பன்மை மயக்கம். உவப்ப-மகிழும் வண்ணம். ச்:சந்தி. சிந்தைக்கு-அந்த மூர்த்தி நாயனார் தம்முடைய திருவுளளத்திற்கு. இனிது-இனியது. ஆய-ஆகிய திருப்பணி -சந்தனக் காப்பை வழங்கும் அந்தத் திருப்பணியை. செய்யும் -புரிந்து கொண்டு வரும். நாளில்-காலத்தில்.

பிறகு உள்ள 11-ஆம் பாடலின் கருத்து வருமாறு: c காடுகளும் காவலும் சுற்றியிருக்கும் வடுக்கரு நாட்