பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்த்தி நாயனார் புராணம் 105

பாண்டி நாட்டைத் தனக்கு உடைய அரசனாகிய பாண்டிய வேந்தனுடைய வீரம் அழியுமாறு யுத்தம் புரிந்து வெற்றியை அடைந்து தன்னுடைய ஆக்ஞையை எங்கும் செல்லுமாறு: புரியும் வழியினால் நறுமணம் கமழும் மலர்கள் மலர்ந்த மரங்கள் வளர்ந்து நிற்கும் பூஞ்சோலை சுற்றியிருக்கும் மதுராபுரியை ஆட்சி புரிந்து பாதுகாக்கும் தொழிலை மேற் கொண்டான். பாடல் வருமாறு: -

வந்துற்ற பெரும்படை மண்புதை யப்பரப்பிச் சந்தப்பொதி யில்தமிழ் காடுடை மன்னன் வீரம் சிந்தச்செரு வென்றுதன் ஆணை செலுத்து மாற்றால் கந்தப்பொழில் சூழ்மது ராபுரி காவல் கொண்டான்.' வந்து உற்ற-அவ்வாறு வந்து சேர்ந்த பெரும்-பெரிய தாக இருக்கும். படை-சேனையை. மண்-தரை. புதையமறையும் வண்ணம். ப்:சந்தி. பரப்பி-பரவலாக இருக்கு மாறு செய்து. ச்:சந்தி. சந்த-சந்தன மலர்கள் வளர்ந்து ஓங்கி நிற்கும்; ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பொதியில் -பொதிய மலையைத் தன்னகத்தே கொண்ட. தமிழ்நாடு -தமிழ் நாடாகிய பாண்டி நாட்டை உடை-தனக்கு உன்ட்ய. மன்னன் அரசனாகிய பாண்டி வேந்தனுடைய. வீரம்சிந்தவீரம் அழியுமாறு. ச்: சந்தி. செரு-யுத்தம் புரிந்து. வென்று. வெற்றியை அடைந்து தன்-தன்னுடைய. ஆனை-ஆக் ஞையை செலுத்தும்-எங்கும் செல்லுமாறு புரியும். ஆற். றால்-வழியினால். கந்த-நறுமணம் கமழும் மலர்கள் மலர்ந்த மரங்கள் வளர்ந்து நிற்கும். ப்:சந்தி. பொழில் பூஞ்சோலை. சூழ்-சுற்றியிருக்கும். மதுராபுரி-மதுரை மிர் நகரத்தை. காவல்-ஆட்சி புரிந்து பாதுகாக்கும் தொழிலை. கொண்டான்-மேற் கொண்டான். . . அடுத்து வரும் 13-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: அந்தக் கருநாடக அரசன் தன்னுடைய வலிமையாகிய ஆண்மையினால் வளப்பத்தைக் கொண்ட் தமிழ்நாடாகிய பாண்டி நாட்டில் மேலும் வளங்கள் உண்டாகுமாறு செய்து நில்லாமையாகிய நிலை பொருந்திய இல்லாமையால் ,