பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பெரிய புராண விளக்கம்-5

உயர்ந்த மேருமலையாகிய வில்லை ஏந்திய சோமசுந்தரப் பெருமானுக்கு அடிமையாக உள்ள திறம் பொருந்திய விபூதி யினுடைய சார்பு நடவாமல் அருகந்தராகிய சமணர்களின் பக்கத்தில் தன்னுடைய உள்ளத்தைத் தங்குமாறு செய் தான். பாடல் வருமாறு:

வல்லாண்மையின் வண்டமிழ் நாடு வளம்படுத்தி கில்லாநிலை ஒன்றிய இன்மையின் நீண்ட மேரு வில்லான்அடிமைத்திறம் மேவிய நீற்றின் சார்பு செல்லாதரு கந்தர் திறத்தினிற் சிந்தை தாழ்ந்தான்." வல்-அந்தக் கருநாடக அரசன் தன்னுடைய வலிமை யாகிய, ஆண்மையின்-ஆண்மையினால்; ஆண்மை-வீரம். வண்-வளப்பத்தைக் கொண்ட தமிழ்நாடு-தமிழ்நாடாகிய பாண்டி நாட்டில்.வளம்படுத்தி-மேலும் வளங்கள் உண்டாகு மாறு செய்து. வளம்: ஒருமை பன்மை மயக்கம். நில்லாநிலைத்து நில்லாத நிலை-நிலைம்ை. ஒன்றிய-பொருந்திய. இன்மையின்-இல்லாமையினால், நீண்ட-உயர்ந்த மேருமேரு மலையாகிய, வில்லான்-வில்லை ஏந்திய சோமசுந்தரக். கடவுளுக்கு, அடிமைத்திறம்-அடிமையாக உள்ள திறமை. மேவிய-பொருந்திய, நீற்றின்-விபூதியினுடைய.சார்பு-சம்பந் தம். செல்லாது-நடவாமல். அருகந்தர்-அருகத் பரமேஷ்டியை வணங்கும் சமணர்களின்; ஒருமை பன்மை மயக்கம். திறத் திணில்-பக்கத்தில். சிந்தை-தன்னுடைய உள்ளத்தை. தாழ்ந் தான்-தங்குமாறு செய்தான்.

பிறகு உள்ள 14-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'அவ்வாறு அந்தக் கருநாடக மன்னன் தான் தன் னுடைய உள்ளத்தைத் தங்குமாறு செய்திருக்கும் சமணர்க ளாகிய இழிந்த குணங்களையும் செயல்களையும் உடையவர் களுடைய தவத்தை உண்மை என்று எண்ணி அவர்களைச் சார்ந்து அவர்கள் வலையில்.விழும் கொடியவனாகிய அந்த மன்னன் அது அல்லாமலும் கொடியதாகிய முற்பிறவியில் செய்து இந்தப் பிறப்பில் வந்து சூழ்ந்த தீவினையால் பாம்பு