பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்த்தி நாயனார் புராணம் 121

கழும். உணவுப் பொருள்களும்; ஒருமை பன்மை மயக்கம். குடியும் குடிமக்களும்; ஒருமை பன்மை மயக்கம். முதலாயினமுதலாக உள்ளவற்றை. கொள்கைத் தேனும்-கொள்ளுதலை உடையதானாலும். சூழும்-தன்னைச் சுற்றியிருக்கும். படைசேனையைப் பெற்ற. மன்னவன்-ஓர் அரசனுடைய, தோள் இணை-இரண்டு தோள்களின் வலிமையினால். தோள்: ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி. காவல்-பாதுகாக்கும் காவல். இன்றி-இல்லாமல். இந்த வையகம்-இந்த உலகத்தில் வாழும் மக்கள்; இட ஆகு பெயர். வாழும்-நல்வாழ்வு வாழும். தசுைத்து-தன்மையை உடையவர்கள்; திணை மயக் கம். அன்று-அல்லர் , திணை மயக்கம். என்று-என. சொன் னார்-கூறினார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

அடுத்து உள்ள 29-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: பல வகைகளாக உள்ள உயர்வுகள் யாவற்றையும் பரிபாவனம் புரிந்து இந்த உலகத்தில் வாழும் மக்களை அர சாட்சி செய்து பாதுகாக்கும் மன்னனுடைய உயரமான வெண்கொற்றக் குடையின் கீழ் அந்த மக்கள் தங்கள் தங்க ளுக்குரிய வழிகளில் நடந்து தங்கள் வாழ்க்கையை நடத்தும். அரசரைப் பெறுதல் இல்லாமல் தங்கியிருக்கும் இந்த மண்ணு. லகத்தில் வாழும் மக்களை நினைக்கும் போது இனிய உயிர் இல்லாமல் வாழும் உடம்பை நிகர்க்கும்.’’ என்று அந்த மந். திரிகள் கூறுவார்களானார்கள். பாடல் வருமாறு: * . ,

' பன்முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலம் காப்பான் தன்னெடும் குடைக்கீழ்த் தத்தம் நெறிகளில் சரித்து

- வாழும் மன்னரை இன்றி வைகும் மண்ணுல கெண்ணும் காலை இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும். என்பார்." பல்-பல, முறை-வகைகளாக உள்ள ஒருமை பன்மை மயக்கம். உயிர்கள் எல்லாம்-உயிர்கள் எல்லாவற்றையும்; அவையாவன மக்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, கடல் வாழ் பிராணிகள், மரம், செடி, கொடி முதலியவை.