பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்த்தி நாயனார் புராணம் 123

இந்தப் பாடல் குளகம். இவ்வகை-இவ்வாறு. பலவும்பலவற்றையும். எண்ணி-அந்த மந்திரிகள் எண்ணிப் பார்த்து. இங்கு-இந்த நாட்டில். இனி-இனிமேல். அரசர்-நாட்டை ஆட்சி புரிந்து பாதுகாக்கும் மன்னர். இல்லை-இப்போது இல்லை. செய்.நாம் புரியத் தக்க, வகை-விதம். இதுவே.இது தான். என்று-என. தெளிபவர்-தெளிவை அடைபவர் களாகி; முற்றெச்சம்; ஒருமை பன்மை மயக்கம். சிறப்பின்சிறப்பினால். மிக்க-மிக்கு விளங்கிய. மை-மையைப் போலக் கருமையாகவும். வரை அனைய-மலையைப் போலப் பெரிய தாகவும் தோன்றும். வேழம்-ஒரு யானையினுடைய. கண்கண்களை ஒருமை பன்மை மயக்கம். கட்டி-கட்டி விட்டு. விட்டால்-அனுப்பினால், மற்று: அசை நிலை, அக்கைவரை. அந்தத் துதிக்கையை உடைய மலையைப் போன்ற யானை. வரை: உவம ஆகு பெயர். கை-தன்னுடைய துதிக்கையினால். கொண்டார்-எடுத்துத் தன்மேல் வைத்துக் கொண்டவர். மண்-இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்களை; இட ஆகு பெயர். காவல்-அரசாட்சி புரிந்து பாதுகாக்கும் காவலை, கைக்கொள்வார்-மேற் கொள்வார். என்று-எனக் கூறி.

பின்பு வரும் 31-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

செம்மையும் மாட்சியும் கொண்ட செயலாகிய அருச் சனையை சாத்திர முறைப்படி அந்த மந்திரிகள் புரிந்து, . 'தன்னுடையதோள்களின் வலிமையினால் இந்தப் பெரிய நாட்டைப் பாதுகாத்துத் தாங்குவதற்கு உரிய ஒரு மன்னனை நீ உன்மேல் எடுத்துக் கொண்டு வருவாயாக’ எனக் கூறி மழையைப் பெய்யும் பெரிய மேகத்தைப்போலக் கன்ன மதம், கபோல மதம், பீஜ மதம் என்னும் மூன்று மதங்களையும் ஒழுக விடும் பெருகிய ஒளியை வீசும் பட்டத்தை அணிந்த நெற்றியையும், துதிக்கையையும் பெற்ற விலங்காகிய யானையை நறுமணம் கமழும் மெல்லிய ஆடையைக் கொண்டு கண்களைக் கட்டி விட்டு அனுப்பினார்கள்."

பாடல் வருமாறு: - 3.