பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#26 பெரிய புராண விளக்கம்-5

எழுந்தருளியிருக்கும் ஆலயத்திற்கு வெளியில் நின்று கொண் டிருக்க. பாடல் வருமாறு:

நீங்கும் இரவின்கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர் 'ஈங்கெம்பெரு மான்அரு ளாம்எனில் இந்த வையம் தாங்கும்செயல் பூண்பன்' என்றுள்ளம் தளர்வு நீங்கிப் பூங்கொன்றை மிலைந்தவர் கோயிற். புறத்து நிற்ப.” இந்தப் பாடல் குளகம். நீங்கும்-கண்களைக் கட்டி விட்ட அந்த யானை ஒடும். இரவின் கண்-அந்த இராத்திரி வேளை .யில். நிகழ்ந்தது-நடந்ததை. கண்ட-பார்த்த. தொண்டர்.திருத்தொண்டராகிய மூர்த்தி நாயனார். ஈங்கு-இந்த இடத் தில். எம்பெருமான்-எம்பெருமானாகிய சோ மசு ந் தர க் கடவுள். அருளாம்-வழங்கிய திருவருள் ஆகும். எனில்என்று கூறினால், இடைக்குறை. இந்த வையம்-இந்த உல கத்தில் வாழும் வக்களை இட ஆகு பெயர். தாங்கும்-அர சாட்சி புரிந்து பாதுகாக்கும். செயல்-பணியை. பூண்பன்அடியேன் ஏற்றுக் கொள்வேன். என்று-என. உள்ளம்-தம் முடைய திருவுள்ளத்தில் உண்டான, தளர்வு-தளர்ச்சியை. நீங்கி-விட்டு விட்டு. ப்: சந்தி, பூங்கொன்றை - கொன்றை மலர் மாலையை ஆகுபெயர். மிலைந்தவர்-அணிந்தவராகிய சோமசுந்தரப் பெருமானார். கோயில்-எழுந்தருளியிருக்கும் ஆலயத்திற்கு. புறத்து-வெளியில். நிற்ப-நின்று கொண்

டிருக்க. -

அடுத்து உள்ள 34-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அவ்வாறு கண்களைக் கட்டி விட்டு அனுப்பிய யானை, அரசன் அந்த இடத்தில் வேகமாக நடந்து போய் நல்வாழ் வைப் பெற்று இந்த உலகத்தில் வாழும் மக்கள் முன்பிறவியில் புரிந்த தவத்தின் பயனாக வள்ளலாராகிய மூர்த்தி நாயனா ரைச் சுற்றியிருக்கும் தங்கம் ஒளியை வீசும் பெருமையைப் பெற்ற அழகிய பெரிய தரையில் படியுமாறு முன்னால் தாழ்ந்து இருந்து அந்த மூர்த்தி நாயனாரை எடுத்துக்