பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்த்தி நாயனார் புராணம் 13t.

செயல்-காரியங்களை ஒருமை பன்மை மயக்கம். சூழ்ந்துஅந்த அமைச்சர்கள் ஆலோசித்து. செய்வார்-புரிபவர்கள் ஆனார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு வரும் 38-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'மூாத்தி நாயனார் வீற்றிருக்கும் கிழக்குத் திசையில் அவருக்கு எதிரில் இடப் பெற்ற ஹோம குண்டத்தில் மங்க லமான ஆகுதிகளைத் தன்னிடத்தில் பெய்யப் பெறும் ஒளியை வீசும் அக்கினியை மூட்டி வளரச் செய்து நெருங்கிய நூல்களைச் சுற்றியிருக்கும் தங்கத்தினால் செய்யப் பெற்ற கலசங்களிலும், பூரண கும்பங்களிலும் நிறையச் செய்த பரி சுத்தமான நீரைத் தியானிக்கும் செயலைப் பெற்ற மந்திரங் களை உச்சரிக்கும் யோகியர்கள் அந்த நாயனாரை அழைத் துக் கொண்டு வந்து நிற்கச் செய்த்ார்கள். பாடல் வருமாறு: மன்னும் திசை வேதியில் மங்கல ஆகுதிக்கண் ~~ துன்னும் சுடர்வன்னி வளர்த்துத் துதைந்த நூல்சூழ் பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூநீர் உன்னும் செயல்மங் திரயோகர் நிறுத்தி னார்கள்.” மன்னும் அந்த மூர்த்தி நாயனார் வீற்றிருக்கும். திசை. கிழக்குத் திசையில். வேதியில்-அவருக்கு எதிரில் இடப் பெற்ற ஹோம குண்டத்தில். மங்கல-மங்கலமாகிய ஆகுதிக் கண்-நெய், சமித்து முதலிய ஆகுதிகளைத் தன்னிடத்தில். ஆகுதி:ஒருமை பன்மை மயக்கம். துன்னும்-பெய்யப் பெறும். சுடர்-ஒளியை வீசும். வன்னி அக்கினையை, வளர்த்து-மூட்டி வளரச் செய்து. த்:சந்தி. துதைந்த-நெருங்கிய நூல்-நூல். களை ஒருமை பன்மை மயக்கம். சூழ்-சுற்றியிருக்கும். பொன்னின்-தங்கத்தினாற் செய்யப் பெற்ற, கலசங்கள். கலசங்களிலும். குடங்கள்-பூரண கும்பங்களிலும். பூரித்தநிறையச் செய்த. துர பரிசுத்தமான, நீர்-கங்கையாறு, காவிரியாறு, தாமிரபர்ணி ஆறு முதலிய ஆறுகளிலிருந்து கொண்டு வந்த நீரை. உன்னும்-தியானிக்கும். செயல்-செய லைப் பெற்ற. மந்திர-வேத மந்திரங்களை உச்சரிக்கும்;: