பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்த்தி நாயனார் புராணம் t 135

மாகுக. என்றார்-என்று அந்த நாயனார் திருவாய் மலர்ந்: தருளிச் செய்தார்.

பின்பு வரும் 42-ஆம் பாடலின் கருத்து வருமாறு: என்று அந்த மூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்த இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் வரம்பு இல் லாத நூல்களைக் கற்ற கல்வியை உடைய சான்றோர்களும், வலிமையும் உறுதியும் அறிவும் சாத்திரங்களில் உள்ள உண்மையை அறிந்த அறிவாற்றலும் பெற்ற மந்திரிகளும், 'இந்த இடத்தில் நடராஜப் பெருமான் வழங்கிய திருவருள் தான் நன்றாக இருக்கிறது” என்று எண்ணி நல்ல தவத்தை முன் பிறவியில் புரிந்த அரசராகிய மூர்த்தி நாயனார் தம் முடைய திருவுள்ளத்தில் ஒன்றியிருக்கும் அரசை ஆட்சி புரியும் உரிமைக்குத் தக்க செயல்களாக இருப்பவற்றைச் செய்து அந்த அமைச்சர்கள் நிறைவேற்றினார்கள். பாடல்

வருமாறு:

என்றிவ்வுரை கேட்டலும் எல்லையில் கல்வி யோரும் வன்திண்மதி நூல்வளர் வாய்மை அமைச்சர் தாமும் 'நன்றிங்கருள் தான்' என கற்றவ வேந்தர் சிங்தை ஒன்றும்அர சாள்உரிமைச்செய லானஉய்த்தார்.' என்று-என அந்த மூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்து அருளிச் செய்த இவ்வுரை-இந்த வார்த்தைகளை, ஒருமை பன்மை மயக்கம். கேட்டலும்-கேட்டவுடன். எல்லை. வரம்பு. இல் - இல்லாத கடைக்குறை. கல்வியோரும் - நல்ல நூல் களைக் கற்ற க வியை உடைய சான்றோர்களும்; ஒருமை பன்மை மயக்கம். வன்-வலிமையையும். திண்-உறுதியையும். மதி-அறிவையும் நூல்-சாத்திரங்களில்; ஒருமை பன்மை: மயக்கம். வளர்-உள்ள. வாய்மை-உண்மையையும் அறிந்த, அமைச்சர் தாமும்-மந்திரிகளும். தாம்: அசை நிலை. இங்குஇந்த இடத்தில். அருள்தான்-நடராஜப் பெருமான் வழங்கிய திருவருள்தான். நன்று-நன்றாக இருக்கிறது. என-என்று எண்ணி; இடைக்குறை. நற்றவ வேந்தர்-முன் பிறவியில்