பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பெரிய புராண விளக்கம்-5

அடுத்து உள்ள 6-ஆம் ெச ய் யு ளி ன் கருத்து வருமாறு:

‘மின்னலைப்போல மின்னுகின்ற சிவந்த சடா பாரத்தைத் தம்முடைய தலையின் மேற்பெற்ற அந்தண ராகிய சிவபெருமானாருக்கு உரியவை ஆகும் என்று எண்ணி சம்பா நெற்களைக் குத்திய அரிசிகளால் ஆன இனிய சுவைபெற்ற திருவமுதோடு சிவந்த நிறத்தைக் கொண்ட கீரையையும், மாமரத்தில் இருக்கும் பசுமை யான தளிர்களோடு கூடிய மாவடுக்களையும் கொண்டு வந்து அவற்றை எந்த நாளிலும் திருவமுதாக வைத்து நிவேதனம் செய்வார் அந்தத் தாயனார். பாடல் வருமாறு:

  • மின்னு செஞ்சடை வேதியர்க் காம்என்று செந்கெல் இன்னமு தோடுசெங் கீரையும் மன்னு பைந்துணர் மாவடு வும்கொணர்ந் தன்ன என்றும் அமுதுசெய் விப்பரால்.' மின்னு-மின்னலைப் போல மின்னுகின்ற. செஞ்சடைசிவந்த சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்ற. வேதியர்க்கு-அந்தணராகிய சிவபெருமானாருக்கு. ஆம்-உரியவை ஆகும். என்று-என்று எண்ணி. செந்நெல். சம்பா நெற்களைக் குத்திய அரிசிகளால் ஆன. நெல்: ஒருமை பன்மை மயக்கம்; ஆகு பெயர். இன்.இனிய சுவையைப் பெற்ற. அமுதோடு-திருவமுதோடு. செங் கீரையும்-சிவந்த நிறத்தைக் கொண்ட கீரையையும். மன்னு-மாமரத்தில் இருக்கும். பைம்-பசுமையாகிய, துணர்தளிர்களோடு கூடிய ஒருமை பன்மை மயக்கம். துணர்காய்க் கொத்துமாம். மாவடுவும்-மாவடுக்களையும்; ஒருமை பன்மை மயக்கம். கொணர்ந்து-தாயனார் கொண்டு வந்து. அன்ன-அவற்றை. என்றும்-எந்த நாளி லும், அமுது செய்விப்பர்-திருவமுது செய்யுமாறு