பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்த்தி நாயனார் புராணம் - 137

திருமால். தேடும் கழலார்-தேடிப் பார்க்கும் வீரக் கழலைப் பூண்ட திருவடிகளை உடையவராகிய சுந்தரேசப் பெருமா னார். சுழல்:ஆகு பெயர். திருவாலவாய்-எழுந்தருளியிருப் பதும் மதுரை மாநகரததில் விளங்குவதும் ஆகிய திருவால வாய் என்னும் ஆலயத்துக்கு. சென்று-எழுந்தருளி. தாழ்ந்துஅந்தச் சோமசுநதரக் கடவுளைத் தரையில் விழுந்து வணங்கி விட்டு. நீடும்-உயரமாக விளங்கும். களிற்றின்மிசை-ஆண் யானையின் மேல் ஏறிக் கொண்டு. நீள்-நீளமான, மறுகூடுஒரு தெருவின் வழியே. போந்தார்-அந்த நாயனார் எழுந் தருளினார். .

அடுத்து உள்ள 44-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: மின்னலைப் போல ஒளியை வீசும் மாணிக்கங்களைப் பதித்த மாளிகைகளின் வாசல்களில் அந்த ஆண் யானையின் மேலிருந்தும் இறங்கி வந்து விளங்கும் பிரகாசத்தை வீசும் ஒரு மண்டபத்தில் தங்கத்தினால் செய்த சரிகை ஆடைன்ய விரித்த மென்மையான சிங்காதனத்தில் சாமரைகளின் விருப்பம் மருவிய மலர் மணத்தைப் பெற்ற தென்றற் காற்று நிலை பெற்று வீசும் வெண் கொற்றக் குடையின் நிழலில் அந்த நாயனார் இந்த உலகத்தில் வாழும் மக்களைப் பாது காத்துக் கொண்டு இருந்தார். பாடல் வருமாறு: - * மின்னும்மணி மாளிகை வாயிலின் வேழ மீது

தன்னின்றும் இழிந்து தயங்கொளி மண்ட பத்திற் பொன்னின் அரிமெல்லணைச் சாமரைக் காமர் -

- - பூங்கால் மன்னும்குடை நீழல் இருந்தனர் வையம் தாங்கி." மின்னும்- ன்னலைப் போல ஒளியை வீசும். மணிமாணிக்கங்களைப் பதித்த; ஒருமை பன்மை மயக்கம். மாளிகை-மாளிகைகளின்; ஒருமை பன்மை மயக்கம்.வாயிலின் -வாசல்களில்; ஒருமை பன்மை மயக்கம், வேழமீது தன்னின் றும்-அந்த ஆண் யானையின் மேலிருந்தும், ன்:அசை நிலை. இழிந்து-இறங்கி வந்து. தயங்கு-விளங்கும். ஒளி-பிரகாசத்தை