பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பெரிய புராண விளக்கம் -

வீசும். மண்டபத்தில்-ஒரு மண்டபத்தில். பொன்னின்- தங் கத்தாற் செய்யப் பெற்ற. அரி-சரிகை ஆடையை விரித்த. மெல்-மென்மையான. அணை-சிங்காதனத்தில், ச்:சந்தி. சாமரை-சாமரைகளின்; ஒருமை பன்மை மயக்கம். சாமரை. பெரிய விசிறி. க்:சந்தி, காமர்-விருப்பர் மருவிய. பூங்கால்மலர்களின் மணத்தைப் பெற்ற தென்றற் காற்று. மன்னும். நிலைபெற்று வீசும். குடை-வெண் கொற்றக் குடையின். நீழல்-நிழலில். வையம்-இந்த உலகத்தில் வாழும் மக்களை; இட ஆகுபெயர். தாங்கி-பாதுகாத்துக் கொண்டு. இருந்தனர் -அந்த நாயனார் இருந்து வந்தார்.

அடுத்து வரும் 45-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'தம்மோடு இருந்து குலாவுகின்ற நியாயத் துறையில் வல்லவர்களாகிய மந்திரிகள் தாம் குறித்த எண்ணத்தின் படி தங்கி ஒழுகக் கலகத்தைப் புரிந்த சமணர்கள் செய்த தீய செயல்களான வற்றின் கட்டிலிருந்து விடுபட்டு என்றும் நிலை பெற்று விளங்கும், விபூதியின் வழியில் நடக்கும் சைவ சமயத் துறை நெடுங்காலமாக வாழுமாறும், இந்த உலகம் எங்கனும் நிறைந்துள்ள சைவ சமயம் உயர்ச்சியை அடைந்து நிலை பெற்று விளங்கவும். பாடல் வருமாறு:

' குலவும்துறை நீதிஅமைச்சர் குறிப்பின் வைகக் கலகம்செய் அமண்செய லாயின கட்டுநீங்கி நிலவும்திரு நீற்று நெறித்துறை நீடுவாழ உலகெங்கும் கிரம்பிய சைவம்உயர்ந்து மன்ன.” இந்தப் பாடல் குளகம். குலவும்-தம்மோடு இருந்து குலாவும். துறைநீதி-நியாயத் துறையில் வல்லவர்களாகிய, திணை மயக்கம். அமைச்சர்-மந்திரிகள்: ஒருமை பன்மை மயக்கம். குறிப்பின்-தாம் குறித்த எண்ணத்தின் படி. வைகதங்கி ஒழுக. க்:சந்தி, கலகம்-கலகத்தை. செய்-புரிந்து வந்த. அமண்-சமணர்கள்; திணை மயக்கம். செயலாயின-செயல் களாயினவற்றின். செயல்: ஒருமை பன்மை மயக்கம். கட்டு

கட்டிலிருந்து. நீங்கி-விடுபட்டு. நிலவும்-என்றும் நிலை