பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 - பெரிய புராண விளக்கம்-இ.

பூசிக் கொள்ளுதல், உருத்திராக்க மாலையை அணிந்துகொள் ளுதல், சடைமுடி தரித்தல் என்பவை. - -

அடுத்து வரும் 47-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'ஏலம் நறுமணம் கமழும் கூந்தல்களைப் பெற்ற பெண் மணிகளுடைய பக்கத்தைச் சார்ந்து வாழ்வதை எல்லாக் காலத்திலும் அகன்று விளங்கும் சீலத்தைத் தாம் மேற். கொண்டு அந்த மூர்த்தி நாயனார் கொடுமையான மெய், வாய், மூக்கு, கண்கள், காதுகள், என்னும் ஐந்து இந்திரியங் களையும் பகைவர்களோடு வெற்றி பெற்று அகற்றி விட்டு இந்த உலகத்தில் ஒப்பற்ற ஆக்ஞா சக்கரத்தை நடத்திக் கொண்டு நன்மைகளைக் கொண்ட ஊழிக் காலம் வரையி லும் எல்லாவகை உயிர்களுக்கும் வரும் துன்பங்களானவற் றைப் போக்கி அந்த உயிர்களை ஆட்சி புரிந்து பாது காத்துக் கொண்டு. பாடல் வருமாறு:

' ஏலம்கமழ் கோதையர் தம்திறம் என்றும் நீங்கும்

சீலம்கொடு வெம்;லன் தெவ்வுடன் வென்று நீக்கி ஞாலம்தணி நேமி நடாத்தி ம்ைகொள் ஊழிக் காலம்உயிர் கட்கிட ரான கடிந்து காத்து.' இந்தப் பாடல் குளகம். ஏலம்-ஏலக்காய். கமழ்-நறு மணம் கமழும். கோதையர் தம்-கூந்தல்களைப் பெற்ற பெண்மணிகளினுடைய. கோதை: ஒருமை பன்மை மயக்கம். கோதையர்: ஒருமை பன் மை மயக்கம். தம்: அசை நிலை, திறம்-பக்கத்தைச் சார்ந்து வாழ்வகை: ஆகு பெயர். என்றும்-எல்லாக் காலத்திலும். நீங்கும்- அகன்று விளங்கும். சிலம்-சீலத்தை. கொடு-தாம் : ம ற் .ெ ண் டு. வெம்கெர்டுமையான. புலன்-மெய், வாய், மூக்கு, கண்கள், காது கள் என்னும் ஐந்து இந்திரியங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். தெவ்வுடன்-பகைவர்களோடு; ஒருமை பன்மை மயக்கம்; திணை மயக்கம். வென்று-வெற்றியைப் பெற்று. நீக்கி-அகற்றி விட்டு, ஞாலம்-இந்த உலகத்தில். தனி-ஒப் பற்ற நேமி-ஆக்ஞா சக்கரத்தை. நடாத்தி-ந ட த் தி க்