பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பெரிய புராண விளக்கம்-5 ஆகு பெயர். ஆண்டு-ஆட்சி புரிந்து கொண்டு. பிகா: டின்-திருத்தொண்டிலிருந்து. பேதம் புரியா-வேறுபாட்டைச் செய்யாத வேறுபடாத. அருள் - சோமசுந்தரக் கடவுள் வழங்கிய திருவருளால். பேர்-பெருமையைப் பெற்ற; புகழைப் பெற்ற எனலும் ஆம், அரசு-அரசை, ஆளப்பெற்று-ஆட்சி புரியும் பேற்றை அடைந்து. நாதன்-தம்முடைய தலைவ னாகிய சோம சுந்தரப் பெருமானுடைய. கழல்-வெற்றிக் கழலைப் பூண்ட. சேவடி-செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த திருவடிகளை அடி: ஒருமை பன்மை மயக்கம். அண்ணலார்-தலைவராகிய அந்த முர்த்தி நாயனார். பெரு மையைப் பெற்றவர் எனலும் ஆம். நண்ணினர்-அடைந் தார். ஏ: ஈற்றசை நிலை.

இந்த மூர்த்தி நாயனார் புராணத்தில் வரும் இறுதிப் :பாடலாகிய 49-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

"அகலமான கருங்கல் பாறையின் மேல் வைத்துத் தம் முடைய முழங்கையை அன்று ஒரு நாள் தேய்த்த பகையை உடைய ஆண் யானையைப் பெற்ற பக்தராகிய அந்த மூர்த்தி நாயனாரைத் துதித்து விட்டு, முருக நாயனாராகும் மேகங்கள் சுற்றித் தவழும் நறுமணம் கமழும் மலர்கள் மலர்ந்த பலவகை மரங்கள் வளர்ந்து நிற்கும் பூம்பொழிவி லுடைய மொய்த்த பிரகாசம் மாடங்கள் உயரமாக நிற்கும் தெருக்களைப் பெற்ற திருப்புகலூரில் திருவவதாரம் செய் .தருளும் வேதியராகிய முருக நாயனாருடைய தொண்டின் வகையை வாழ்த்திப் பாடத் தொடங்கினோம் பாடல்

வருமாறு:

" அகல்பாறையின் வைத்து முழங்கையை அன்று தேய்த்த

இகலார்களிற் றன்பரை ஏத்தி முருகனாராம் முகில்சூழ் கறுஞ்சோலையின் மொய்யொளி மாட வீதிப் புகலூர்வரும் அந்தணர் தம்திறம் போற்ற லுற்றாம்.' இந்தப் பாடல் சேக்கிழார் அடுத்து வரும் முருக நாய :னார் புராணத்தின் தோற்றுவாயாகப் பாடியருளியது. அகல்