பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருக நாயனார் புராணம் 14s

சோதிசூழும் மணிமெளலித் சோழர் பொன்னித்

திருநாட்டுப்

போதுசூழும் தடஞ்சோலைப் பொய்கை சூழும்

! - பூம்புகலூர்.' தாது - மலர்களில் உள்ள மகரந்தப் பொடிகள்; ஒருமை பன்மை மயக்கம். சூழும்-சுற்றி நறுமணத்தை வீசும். குழல்கூந்தலைப் பெற்ற. மலையாள்-இமாசல அரசனுடைய புதல் வியாகிய பார்வதி தேவி. மலை:திணை மயக்கம் தளிர்தன்னுடைய தளிர்களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். தளிர்-முற்றாத இலை. க்:சந்தி. கை-திருக்கரங்கள் ஒருமை பன்மை மயக்கம். சூழும்-சுற்றித் தழுவும். திருமேனி மீதுதிருமேனியின் மேல். சூழும்-சுற்றியிருக்கும். புனல்-கங்கை யாற்றின் நீரைத் தாங்கும். கற்றை-தொகுதியாக உள்ள. வேணி-சடாபாரத்தைத் தம்முடைய தலையிற் பெற்ற. நம்பர்-தம்முடைய பக்தர்களுக்குப் பலவகையான நம்பிக்கை களை உண்டாக்குபவராகிய அ க் கி னி சு வ ர ர். விரும்புவிரும்பிக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். பதி-சிவத் தலம். சோதி-ஒளி வெள்ளத்தை. சூழும்-சுற்றி வீசும். மணிமாணிக்கங்களைப் பதித்த, ஒருமை பன்மை மயக்கம். மெளவி -மகுடத்தைச் சூடிய, ச்சந்தி. சோழர்-சோழ மன்னர்கள் ஆட்சி புரிந்த ஒருமை பன்மை மயக்கம். பொன்னி-பொன் னைக் கொழிக்கும் காவிரி ஆறு ஒடும்; 'பொன்னி பொன் கொழிக்கும்.’’ என வருவதைக் காண்க. த்:சந்தி திரு.செல் வர்கள் வாழும்; திணை மயக்கம். நாட்டு-சோழ நாட்டில். ப்:சந்தி. போது-மலர்கள்: ஒருமை பன்மை மயக்கம். சூழும்சுற்றி மலர்ந்த பல வகை மரங்கள் வளர்ந்து நிற்கும். தடம்-விசாலமாகிய, சோலை-பூம்பொழிலும். ப்: சந்தி. பொய்கை-மனிதர் ஆக்காத நீர் நிலையும். சூழும்-சுற்றி விளங்கும் ஊர். பூம்புகலூர்-அழகிய திருப்புக லூர் ஆகும். திருப்புகலூர் : இது சோழ நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திருநாமங்கள்