பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிவாட்டாய நாயனார் புராணம் 11

செய்வார்; நிவேதனம் செய்வார் என்பது கருத்து. ஆல்: சற்றசை நிலை.

. சிவபெருமானுடைய சடாபாரத்துக்கு மின்னலை உவமையாகச் சொல்லும் இடங்களை முன்பே ஓரிடத் தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. சிவபெருமானாரை வேதியர் என்று குறிப்பிடும் இடங்களையும் முன்பே ஒரிடத்தில் காட்டினோம்; ஆண்டுக் கண்டுணர்க.

பிறகு வரும் 7-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

இத்தகைய நல்ல நிலை துன்பத்தைத் தரும் வறுமை - தம்மை வந்து அடைந்தாலும் தம்முடைய திருவுள்ளத் திலிருந்து அகலாத செயலைச் செய்வதில் மகிழ்ச்சியை அடைந்து இட்டு வர, பழையவை ஆகிய இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களுக்கும் முதல்வராகிய சிவபெரு மானார் அந்தத் தாயனாரிடத்தில் அமைந்திருந்த செல் வத்தை அவர் தெரிந்து கொள்ளாதபடி போகச் செய் தருளினார். பாடல் வருமாறு: 战学

இந்த நன்னிலை இன்னல்வந் தெய்தினும் சிங்தை நீங்காச் செயலின் உவந்திட முந்தை வேத முதல்வர் அவர்வழி வந்த செல்வம் அறியாமை மாற்றினார்." இந்த-இத்தகைய நல்-நல்ல. நிலை-தாம் ஆற்றி வரும் நிலை. என்றது சோற்றையும் கீரையையும் மாவடு வையும் சிவபெருமானுக்கு நிவேதனம் செய்வதை. இன்னல்-துன்பத்தைத் தரும் வறுமை; ஆகுபெயர். வந்து எய்தினும்-தம்மை வந்து அடைந்தாலும். சிந்தை-தம்மு டைய திருவுள்ளத்திலிருந்து நீங்கா-அகலாத. ச்: சந்தி, செயலின் - அதைச் செய்வதில். உவந்து-மகிழ்ச்சியை அடைந்து. இட-நிவேதனம் செய்து வர, முந்தை-பழையவை ஆகிய வேத-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களுக்கும்; ஒருமை