பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பெரிய புராண விளக்கம்-5

அக்கினீசுவரர், கோணப் பிரான் என்பவை. அம்பிகை

கருந்தாழ் குழலியம்மை. தீர்த்தம் அக்கினி தீர்த்தம். தல விருட்சம் புன்னை மரம். இந்தத் தலம் நன்னிலத்திலிருந்து கிழக்கில் நான்கு மைல் தூரத்தில் உள்ளது. இது அக்கினி' பூசித்த தலம். தெற்குப் பக்கத்தைத் தவிர மற்றப் பக்கங் களில் கருங்கற்களாற் கட்டப் பெற்ற அகழி உள்ளது. கோணப் பிரானுடைய திருவுருவம் சற்றுச் சாய்ந்திருக் கிறது. இந்த ஆலயத்தில் சந்திரசேகரர் சந்நிதி சிறப்பைப் பெற்று விளங்குவது. அந்தச் சந்நிதிக்கு நேராக அக்கினி பகவானுடைய திருவுருவம் இருக்கிறது. திருப்புகலூர் வர்த்த: மானிசுவரம் என்னும் சந்நிதி இந்த ஆலயத்துக்குள் இருக் கிறது. கோணப் பிரானுக்குப் பலவகையான ம ல ர் மாலைகளைக் கட் டி வழங்கி ய முருக நாயனார் திருவவதாரம் செய்தருளிய தலம் இது. சுந்தரமூர்த்தி நாயனார் இந்த ஆலயத்தில் துயில் கொண்டருளிய சமயத் தில் அவர் தம்முடைய தலையின் கீழ் தலையணையைப் போல வைத்துக் கொண்டிருந்த செங்கற்கள் யாவும் செம் பொற்கற்களாக இருப்பதைக்கண்டு,"தம்மையே புகழ்ந்திச்சை பேசினும்’ என்று தொடங்கும் ஒரு திருப்பதிகததைப் பாடி. அருளினார். இந்தத் தலத்தைப் பற்றிய தேவாரத்தில், "புன்னைப் பொழிற்புக லுரண்ணல் செய்வன கேண்மின் களோ", "புன்னைத் தாது பொழிற்புகலூரை.', 'கரம் நாலைந்து டைக் கோண ற் பிரானை வலிதொலைத் தோன் தொல்லை நீர்ப்புகலூர்க் கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடு வினையே ", "பெருந்தாழ் சடைமுடி மேற். பிறை சூடிக் கருந்தாழ் குழலியும் தாமும் கலந்து.'. "தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலும் சாந்தமும் புகையும் கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன் செய் சோலம்.’’ என வருவனவற்றால் இந்தத் தல சம்பந்த, மான பல செய்திசள் புலப்படுத்தப் பெற்றுள்ளன. இந்தத்